ஜெயம் ரவி நடிப்பில் கோமாளி படத்தை இயக்கியவர் பிரதீப் ரங்கநாதன். அவர் தற்போது ஹீரோவாக நடிக்கிறார்.
கோமாளி சுவாரஸியமான கதைக்களத்தில் எடுக்கப்பட்ட திரைப்படம். வசூல்ரீதியாக வெற்றியும் பெற்றது. இந்தப் படத்தை இயக்கிய பிரதீப் ரங்கதாநன் அடுத்து ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் படம் இயக்குகிறார், அவரே நாயகனாக நடிக்கக்கூடும் என பல மாதங்கள் முன்பே செய்தி வெளியிட்டிருந்தோம். அதனை தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்துக்கு யுவன் இசையமைக்கிறார். "பள்ளியில் படிக்கையில் பையா படத்தின் பாடல்களை திரும்பத் திரும்ப கேட்ட போது, யுவனுடன் இணைந்து பணியாற்றுவேன் என்று கொஞ்சமும் நினைக்கவில்லை. வாழ்க்கையில் எது வேண்டுமானாலும் நடக்கும்" என பிரதீப் ரங்கநாதன் கூறியுள்ளார்.
இந்தப் படத்தில் நடிக்க 6 - 10 வயதுள்ள ஆண் சிறுவர்களும், 18 - 60 வயதுள்ள ஆண், பெண் நடிகர்களும் தேவைப்படுகிறார்கள். விருப்பம் இருப்பவர்கள் தங்களின் புகைப்படம் மற்றும் இதற்கு முன் நடித்த வீடியோ ஆகியவற்றை என்ற castingforpr2@gmail.com இமெயிலுக்கோ அல்லது 9363345806 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ அனுப்பி வைக்கவும்.
Did I even imagine I would work with the legend @thisisysr when I was hearing Paiyaa songs on repeat during my school days . Anything can happen in life .
-@Ags_production #Production22@agscinemas @archanakalpathi @aishkalpathi @onlynikil pic.twitter.com/ttjr4K4UOU
— Pradeep Ranganathan (@pradeeponelife) December 20, 2021
புரொடக்ஷன் நம்பர் 22 என தற்காலிகமாக அழைக்கப்படும் இந்தப் படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் தொடங்கியுள்ளன. விரைவில் படத்தின் நாயகி, பிற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்து அறிவிக்க உள்ளனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.