• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Samyuktha Hegde: கோமாளி படத்தில் ஜெயம் ரவியுடன் நாயகியாக நடித்தவருக்கு கொரோனா பாதிப்பு!

Samyuktha Hegde: கோமாளி படத்தில் ஜெயம் ரவியுடன் நாயகியாக நடித்தவருக்கு கொரோனா பாதிப்பு!

நடிகை சம்யுக்தா ஹெக்டே

நடிகை சம்யுக்தா ஹெக்டே

கோமாளி மட்டும் அல்லாமல் வாட்ச்மேன், பப்பி உள்ளிட்ட தமிழ் படங்களிலும் சம்யுக்தா நடித்துள்ளார்

  • Share this:
தமிழில் ஜெயம் ரவியுடன் கோமாளி படத்தில் நடித்த கன்னட நடிகை சம்யுத்தா ஹெக்டேவிற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தினந்தோறும் லட்சக்கணக்கில் இருந்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் முதல் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை கோர முகத்தை காட்டி வருகிறது. இதன் காரணமாக தினசரி பாதிப்புக்கு ஆளாவோரின் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்தது.

கொரோனாவால் பொதுமக்கள் மட்டுமல்லாது அரசியல், திரைத்துறையினர், தொழிலதிபர்கள் என அனைத்து துறையைச் சேர்ந்தவர்களும் பாதிப்புக்கு ஆளாகிவருகின்றனர்.

இந்த வகையில் தமிழில் நடிகர் ஜெயம் ரவியுடன் கோமாளி படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்த கன்னட நடிகை பூஜாஹெக்டேவுக்கு (வயது 22) கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் இதனை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஸ்டோரிஸின் மூலம் அறிவித்துள்ளார்.

சமீபத்தில் அவருடைய பெற்றோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவித்துள்ள பூஜா ஹெக்டே, அவர்கள் குணமடைந்த நிலையில் தனக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.

பெங்களூருவில் வசித்து வரும் பூஜா, இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள ஸ்டோரியில் தெரிவித்திருப்பதாவது, “எனக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. நான் தற்போது வீட்டிலேயே என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். மருத்துவர் அறிவுரைப்படி தேவையான அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளையும் பின்பற்றுகிறேன். உங்களை பாதுகாத்து கொள்ளுங்கள். பாசிட்டிவாக இருங்கள், நெகட்டிவ் என டெஸ்ட் ஆகுங்கள்” என தெரிவித்துள்ளார்.

சம்யுக்தா ஹெக்டே மேலும் தெரிவித்திருப்பதாவது, என்னுடைய பெற்றோர்கள் தற்போது குணமடைந்துள்ளனர், அவர்களுக்கு பிறகு எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் நிம்மதி அடைகிறேன். என்னுடைய இன்ஸ்டாவில் கொரோனா பாதிப்புகளுக்கான உதவி கோரி வரும் மெசேஜ்கள் பெருமளவு குறைந்திருப்பதை பார்த்து மகிழ்ச்சியடைகிறேன். என்னுடைய பெற்றோர்களுக்கு கொரோனா வந்த போது இருந்தது போன்று இல்லாமல் பெங்களூரு மாநகராட்சியினர் தற்போது விரைவாக நடவடிக்கை மேற்கொள்கின்றனர்.

எனக்கு பாசிட்டிவ் என வந்த போது ஒரு மணி நேரத்திலேயே என்னை தொடர்பு கொண்டு பேசினர், அதுவே எனது பெற்றொருக்கு பாதிப்பு ஏற்பட்ட போது 11 நாட்களுக்கு பின்னர் தான் அவர்களிடம் இருந்து அழைப்பு வந்ததாகவும் தெரிவிக்கிறார்.

கோமாளி மட்டும் அல்லாமல் வாட்ச்மேன், பப்பி உள்ளிட்ட தமிழ் படங்களிலும் சம்யுக்தா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: