லட்சாதிபதி மற்றும் கோடீஸ்வரர் ஆக விரும்பும் தமிழ் ரசிகர்களுக்காக புதிய பிரத்யேக நிகழ்ச்சியான 'கோடீஸ்வரி' என்னும் நிகழ்ச்சியை கலர்ஸ் தமிழ் ஒளிபரப்ப உள்ளது.
ஒருவரது அறிவுத்திறன் ஒருபோதும் வீண்போவதில்லை. நீங்கள் எந்த பாலினம், ஜாதி, மதம், சமூகம் என்பது முக்கியமில்லை. உங்கள் வாழ்க்கையை வடிவமைப்பதில் கல்வி ஒரு ஒருங்கிணைந்த பங்களிக்கிறது.
அதை மீண்டும் நிரூபிக்கும் வகையில், கலர்ஸ் தமிழ் சேனல் உங்கள் வாழ்நாளின் வளமைக்கான வாய்ப்பை வழங்குகிறது. மேலும் ஒருவரின் லட்சியத்திற்கான சிறகுகளையும் அளிக்கிறது.
உங்களில் யார் கோடீஸ்வரியாக விரும்புகிறீர்கள், அவர்களுக்காக கலர்ஸ் தமிழ் புதிய நிகழ்ச்சியான `கோடீஸ்வரி நிகழ்ச்சியை ஒளிபரப்ப உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அதிகாரமிக்க மற்றும் சுயாதீனமிக்க பெண்களின் கனவுகளை இந்நிகழ்ச்சி நனவாக்கும். ஒருவரின் ஒரே வழிகாட்டியாக அறிவு மட்டுமே இருப்பதால், கோடீஸ்வரி நிகழ்ச்சி, லட்சாதிபதியாக விரும்பும் ஆர்வமுள்ளவர்களுக்கான வெற்றிப் படிக்கட்டுகளை உருவாக்கும் நிகழ்ச்சியாகும். ஆர்வத்தை தூண்டும் இந்த நிகழ்ச்சி வரும் நாட்களில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும்.