இனி ஒவ்வொரு சனிக்கிழமையும் ஜாலி தான்... கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் அசத்தல் அறிவிப்பு!

இனி ஒவ்வொரு சனிக்கிழமையும் ஜாலி தான்... கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் அசத்தல் அறிவிப்பு!

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி சீரியல்கள்

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி கிழமை வரை ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த சீரியல்கள் அனைத்தும் இனி சனிகிழமை வரை ஒளிபரப்பாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி சீரியல்கள் இனி திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி கிழமை வரை ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த சீரியல்கள் அனைத்தும் இனி சனிகிழமை வரை ஒளிபரப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  அதன் அடிப்படையில் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 06:30 மணிக்கு ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த ஓவியா சீரியல் இனி சனிக்கிழமையுல் ஒளிபரப்பாக உள்ளது.

  மாதவியின் சூழ்ச்சியை கடந்து ஓவியாவிடம் தன் காதலை சூர்யா சொல்வாரா என்பதுதான் கதையின் போக்கு.

  இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் தறி சீரியல் இனி திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒளிபரப்பாக உள்ளது. நெசவுத் தொழிலாளர்களின் வாழ்க்கையை மையப்படுத்திய இந்த கதையில் நக்‌ஷத்திராவிடம் அன்னம் வெற்றிபெறுவாரா என்பதுதான் கதையின் போக்கு.

  இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகும் மலர் சீரியல் இனி திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒளிபரப்பாக உள்ளது. திருமணத்திற்கு முன் மலர் செய்த குற்றத்தினை அவரது கணவர் கண்டுபிடிப்பாரா? அவ்வாறு கண்டுபிடித்தால் மலரை ஏற்றுக்கொள்வாரா அல்லது அவரை விட்டு விலகிவிடுவாறா என்பதுதான் கதையின் போக்கு.

  Also read... பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறப்போகும் நபர் யார்?

  இரவு 8 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிவகாமி சீரியல், ஆணவ கொலையால் பாதிக்கப்படும் கதாநாயகி அதற்கு பழிவாங்குவதே இந்த சீரியலின் கதை ஆகும். ஆணவ கொலையால் தனது தந்தையை இழந்த நாயகி அதற்காக என்ன செய்யப்போகிறார் என்பதை தெரிந்து கொள்ள திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒளிப்பரப்பாகும் இந்த சீரியலில் காணலாம்.

  இரவு 8: 30 மணிக்கு ஒளிபரப்பாகும் மைனா சீரியலின் கதை கொத்தடிமைகளில் வாழ்க்கையை மையமாக கொண்டுள்ளது.

  இரவு 09:30 மணிக்கு ஒளிபரப்பாகும் பேரழகி சீரியல் நிறம் குறைவாக உள்ள பெண்ணிn வாழ்க்கையை மையமாக கொண்டது. சிறு வயதில் இருந்து தனது நிறத்தால் கஷ்டப்படும் நாயகி பின்பு படங்களில் நடிக்கும் பெரிய கதாநாயகியாக மாறுகிறார். நாயகிக்கும் நாயகனுக்கும் காதல் ஏற்பட அந்த காதல் சேருமா என்பதுதான் கதைகளம்.

  இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் திருமணம் சீரியலில் நாயகி ஜனனியும் நாயகன் சந்தோஹும் பிரச்னைகளை கடந்து ஒன்று சேர்வார்களா? அல்லது மாயாவின் சூழ்ச்சியால் பிரிந்து விடுவார்களா என்பதுதான் கதை களம். Also see...

  Published by:Vinothini Aandisamy
  First published: