Home /News /entertainment /

மழையில் வழுக்கி விழுந்த சீரியல் நடிகை Rachitha Mahalakshmi.. உண்மையாகவே விழுந்தாரா.? இல்ல நடிப்பா.?

மழையில் வழுக்கி விழுந்த சீரியல் நடிகை Rachitha Mahalakshmi.. உண்மையாகவே விழுந்தாரா.? இல்ல நடிப்பா.?

rachitha

rachitha

Rachitha Mahalakshmi | இந்த சீரியல், இந்த சமூகத்தில் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் தொடர்ந்து பேசி வருகிறது. இதனாலேயே பெண்கள் மத்தியில் இந்த சீரியல் மெல்ல மெல்ல பிரபலம் அடைந்து வருகிறது.

கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் 'இது சொல்ல மறந்த கதை' சீரியல் ஆனது மெல்ல மெல்ல ரசிகர்களின் 'ஃபேவரைட்' சீரியலாக உருமாறி வருகிறது. கடந்த மார்ச் 7 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் பிரபல டிவி சீரியல் நடிகையான ரச்சிதா மஹாலக்ஷ்மி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதால் 'ப்ரோமோ வீடியோக்கள்' வெளியான நாளில் இருந்தே 'இது சொல்ல மறந்த கதை' சீரியலின் மீதான எதிர்பார்ப்பு எகிறியது. அதுமட்டுமின்றி தன் கேரியரின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகித்த விஜய் டிவியில் இருந்து வெளியேறி ரச்சிதா நடிக்கும் முதல் சீரியல் என்பதாலும் 'இது சொல்ல மறந்த கதை' சீரியலின் மீது ஒரு தனி எதிர்பார்ப்பும் இருந்தது.

அதற்கு ஏற்றாற்போல கணவனை இழந்து, தன் குழந்தைகளுடன் வாழும் ஒரு பெண் கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து வருகிறார் ரச்சிதா. மேலும் இந்த சீரியல், சமூகத்தில் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் தொடர்ந்து பேசி வருகிறது. இதனாலேயே பெண்கள் மத்தியில் இந்த சீரியல் மெல்ல மெல்ல பிரபலம் அடைந்து வருகிறது.

இந்நிலையில் இது சொல்ல மறந்த கதை சீரியலின் ஷூட்டிங் போது ரச்சிதா மழையில் வழுக்கி கீழே விழுவதை காட்டும் ஒரு வீடியோ வெளியாகி சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகி உள்ளது. குறிப்பிட்ட வீடியோவில், கையில் குடையுடன் போலியாக பொழியும் மழைக்குள் நுழைகிறார் ரச்சிதா, மழைக்குள் தன் காலை எடுத்து வைத்த வேகத்திலேயே அவர் கீழே வழுக்கி விழுகிறார். இருப்பினும் ஷூட்டிங் நிறுத்தப்படவில்லை, அவர் கீழே விழுந்தது, பிறகு தட்டுத்தடுமாறி எழுவது என அனைத்துமே தொடர்ந்து படமாக்கப்படுகிறது.



மழையில் வழுக்கி கீழே விழுந்த ரச்சிதா எழுந்து வந்து வீட்டின் திண்ணையில் அமரும் வரையிலாக இது எல்லாமே ஷூட்டிங்கிற்கான திட்டமிடப்பட்ட நடிப்பு என்பது போலவே தான் தெரிகிறது. ஏனெனில் வீட்டின் திண்ணையில் அமர்ந்த வேகத்தில் ரச்சிதா தன் காலை பிடித்து பார்க்கிறார், அடி எதுவும் படவில்லையே என்கிற கோணத்தில் தன் காலை பரிசோதிக்கிறார். அந்த நொடியில் தான் ரச்சிதா உண்மையிலேயே கீழே விழுந்து விட்டாரோ என்கிற எண்ணமே நமக்கு தோன்றுகிறது. ஆனால் மழையில் வழுக்கி விழும் போது அவர் வேண்டுமென்றே தான் கீழே விழுகிறார் என்பது "பச்சையாக" தெரிகிறது. ஆனால் ஷூட்டிங் முடிந்த பிறகு ஏன் தன் காலை சரிபார்த்தார் என்பது தான் குழப்பமாக உள்ளது.

Also Read : ‘ரஜினி படங்களில் பெண்களை தப்பா காட்டிருக்காங்க’ – ஆர்.ஜே. பாலாஜி பேச்சால் சர்ச்சை

இந்த வீடியோவை பார்த்த சில "புத்திசாலித்தனமான" ரசிகர்கள், ரச்சிதா கீழே விழுந்தும் கூட அவரை தூக்காமல், ஷூட்டிங்கை நிறுத்தாமல் அதையும் சேர்த்து ஷூட் செய்கிறார்கள் என்று கருத்து கூறி வருகின்றனர். குறிப்பிட்ட வழுக்கி விழும் சீன் சீரியலில் வந்தால் தெரியும், எது உண்மை எது நடிப்பு என்று!
Published by:Selvi M
First published:

Tags: Colors Tamil | கலர்ஸ் தமிழ், Entertainment, Rachitha Mahalakshmi

அடுத்த செய்தி