HOME»NEWS»ENTERTAINMENT»colors tamil tv weekend shows bajan samrat colors kitchen scs

வார இறுதியை வண்ணமயமாக்கும் கலர்ஸ் தமிழ் நிகழ்ச்சிகள்!

பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த நிகழ்ச்சிகளை இந்த வார இறுதியில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்ப உள்ளது.

வார இறுதியை வண்ணமயமாக்கும் கலர்ஸ் தமிழ் நிகழ்ச்சிகள்!
கலர்ஸ் தமிழ் டிவி
  • Share this:

வார இறுதியை வண்ணமயமாக்கும் வகையில், வித்தியாசமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி.

பண்டிகை கால விடுமுறையை தொடர்ந்து நாடகம், தொடர்கள் இல்லாத பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த நிகழ்ச்சிகளை இந்த வார இறுதியில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்ப உள்ளது. வரும் 23 மற்றும் 24-ம் தேதிகளில் கலர்ஸ் கிச்சன், பஜன் சாம்ராட் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக உள்ளன. இதில் கலர்ஸ் கிச்சன் நிகழ்ச்சியில் விதவிதமான உணவுகளை சமையல் கலை நிபுணர்களும், பிரபலங்களும் சமைத்து அசத்த இருக்கிறார்கள். பஜன் சாம்ராட் நிகழ்ச்சியில் கர்நாடக இசை பிரபலங்கள் நடுவர்களாக பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பிக்கிறார்கள்.

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி புதிதாக துவக்கிய பஜன் சாம்ராட் நிகழ்ச்சியில் 24 குழுக்கள் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்துகிறார்கள். இதில் நடுவர் குழுவால் தேர்வு செய்யப்பட்ட 10 குழுக்கள் அடுத்த சுற்றுக்கு செல்கின்றன. எலிமினேஷன் சுற்றில் மீதம் உள்ள 14 குழுக்களுக்கு கடுமையாக போட்டி நிலவும். இதில் கர்நாடக இசை புகழ் டாக்டர் ஆர். கணேஷ் மற்றும் மகதி ஆகியோர் பங்கேற்கின்றனர். பிரியதர்ஷினி தொகுத்து வழங்கும் பஜன் சாம்ராட் நிகழ்ச்சிக்கு, சிறப்பு நடுவர்களாக பிரபல கர்நாடக இசை புகழ் சாந்தி சுரேஷ், குடந்தை சரவணன் மற்றும் கடம் உமா சங்கர் ஆகியோர் பங்கேற்கின்றனர்.



அதோடு பார்வையாளர்களிடம் வரவேற்பைப் பெற்ற ‘கலர்ஸ் கிச்சன்’ நிகழ்ச்சியும் ஒளிபரப்பாகிறது. இதில் சமையல் கலை நிபுணர்கள் தாமு மற்றும் ஸ்ரேயா ஆகியோர் அன்னாசிபழ ப்ரைடு ரைஸ், முட்டைக்கோஸ் கீமா ரோல், கோதுமை ரவை பிஸ்கெட் மற்றும் கருவேப்பிலை சிக்கன் வருவல் உள்ளிட்ட உணவுகளை சமைத்து காண்பிக்க இருக்கிறார்கள்.

இதில் விஐபி வீட்டு சமையல் மற்றும் கில்லாடி குக் ஆகிய பிரிவில் நடிகை வைஷாலி மற்றும் தாட்சியாயினி ஆகியோர் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு சில்லி சிக்கன் பரோட்டா, நெய் உருளை உருண்டை, மீன் அல்வா மற்றும் கலக்கல் ஸ்மூத்தி உள்ளிட்ட விதவிதமான உணவுகளை சமைக்க இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியை ஸ்ரீரஞ்சனி தொகுத்து வழங்க இருக்கிறார்.

வரும் 23 மற்றும் 24-ம் தேதிகளில் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சிகள், அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை ஒளிபரப்பாவது குறிப்பிடத்தக்கது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published: