அதிரடி காட்சிகள் நிறைந்த ‘செம திமிரு’ திரைப்படம்: கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இன்று ஒளிபரப்பாகிறது

செம திமிரு

நிப்பான் பெயிண்ட் வெதர்பாண்ட் புரோ வழங்கும் இத்திரைப்படம் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் சன்டே சினி ஜம்போவில் இன்று மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகும்

 • Share this:
  சென்னை, ஜூலை, 24– தமிழகத்தின் இளமைமிக்க பொழுதுபோக்கு சேனலான கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் வரும் ஞாயிற்றுக்கிழமை இந்த மாதத்திற்கான திரைப்படமாக அதிரடி திரைப்படம் ‘செம திமிரு’ ஒளிபரப்பாக உள்ளது. துருவா சர்ஜா மற்றும் ரஷ்மிகா மந்தனா ஆகியோர் நடித்த இந்த திரைப்படம் அதன் நன்கு திட்டமிடப்பட்ட அதிரடி காட்சிகளுடன் இந்த வார இறுதியில் உங்களை உற்சாகப்படுத்தும் என்பது உறுதி.

  இந்த திரைப்படத்தை நிப்பான் பெயிண்ட் வெதர்பாண்ட் புரோ வழங்குகிறது. சன்டே சினி ஜம்போவில் இன்று  (25 ஜூலை, 2021,  ஞாயிற்றுக்கிழமை ) மதியம் 1.00 மணிக்கும், மீண்டும் மாலை 4.30 மணிக்கும் ஒளிபரப்பாக உள்ள ‘செம திமிரு’ திரைப்படத்தை காண நீங்கள் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்யுங்கள்.

  கன்னடத்தில் வெளியான போகாரு என்ற திரைப்படம் மொழிமாற்றம் செய்யப்பட்டு தமிழில் ‘செம திமிரு’ என்று வெளிவந்தது. இந்த படத்தின் கதை, பொதுமக்கள் நீதிக்கான ஒரு ரஷ்ய போராட்டம் பற்றியதாகும். இந்தப் படத்தின் கதாநாயகன் தாயின் அன்பிற்காக ஏங்குகிறார். அதுவே எப்போதும் சிறப்பு என்று கருதுகிறார். நகைச்சுவை, காதல் மற்றும் உணர்ச்சிபூர்வமான சம்பவங்களின் சரியான கலவையான இந்தப் படம் ஒரு ஆரோக்கியமான பொழுதுபோக்கு உடன் வார இறுதியில் பார்வையாளர்களுக்கு சரியான விருந்து படைக்கும்.  இந்த படத்தை இயக்குனர் நந்தா கிஷோர் இயக்கி உள்ளார். இதில் புகழ்பெற்ற நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இதில் 2 சக்திவாய்ந்த கதாபாத்திரங்களை தவிர, சிக்கனா, பி.ரவிசங்கர், ராகவேந்திர ராஜ்குமார் மற்றும் சம்பத் ராஜ், தனஞ்சய், கை கிரீனா, மோர்கன் அஸ்தே, தர்மா ஆகிய துணை நடிகர்களும் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் பார்வையாளர்களுக்கு ஒரு சிறந்த பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த படமாக இருக்கும்.

  கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் மட்டுமே ஒளிபரப்பாகும் பல சூழ்ச்சிகள் நிறைந்த இந்த திரைப்படத்தை ஜூலை 25, 2021, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணி மற்றும் மாலை 4.30 மணிக்கு காண தயாராகுங்கள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Sankaravadivoo G
  First published: