கலர்ஸ் தமிழின் முதல் டாக் ஷோ... ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் உடன் கவுதம் மேனன், ஆன்ட்ரியா உள்ளிட்டோர் பங்கேற்பு

கலர்ஸ் தமிழின் முதல் டாக் ஷோ... ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் உடன் கவுதம் மேனன், ஆன்ட்ரியா உள்ளிட்டோர் பங்கேற்பு

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி நடத்தும் முதல் டாக் ஷோ குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் உடன் பல்வேறு துறை சார்ந்த பிரபலங்கள் பங்கு பெற்று உரையாடல் நிகழ்த்த உள்ளனர்.

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி நடத்தும் முதல் டாக் ஷோ குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் உடன் பல்வேறு துறை சார்ந்த பிரபலங்கள் பங்கு பெற்று உரையாடல் நிகழ்த்த உள்ளனர்.

 • Share this:
  இந்த ஒட்டுமொத்த உலகின் மானுட சமுதாயமே ஒரு மாபெரும் நெருக்கடி நிலையில் சிக்கித் தவிக்கின்றபோது, இந்த துயரக்கடலை துணிவுடன் கடக்க தேவைப்படுவதெல்லாம் நம்பிக்கையின் ஒளிக்கீற்று மட்டுமே என்பதை பலரும் கற்பனை செய்து பார்ப்பதில்லை.

  இந்த கடுமையான காலகட்டத்தை ஓரளவுக்கு சுமை குறைந்ததாக தனது பார்வையாளர்களுக்கு ஆக்கவேண்டும் மற்றும் புதிய மற்றும் புத்தாக்கமான நிகழ்ச்சிகளின் மூலம் அவர்களை ஈடுபாடுகொள்ளச் செய்யவேண்டும் என்ற குறிக்கோளின் அடிப்படையில் 'சிந்தனைகள் சிம்ளிஃபைடு'  என்ற பெயரில் தி ஆர்ட் ஆஃப் லிவ்விங் அறக்கட்டளையின் ஒத்துழைப்போடு உரையாடல் அடிப்படையிலான டாக் ஷோ நிகழ்ச்சியை கலர்ஸ் தமிழ் வழங்குகிறது.

  இதயத்திற்கு இதயம் உரையாடுகின்ற, உத்வேகத்தை உயர்த்துகின்ற ஒரு நிகழ்ச்சியாக அமைந்திருக்கும் இது, ஆகஸ்ட் 23 -ம் தேதி தொடங்கி, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையன்றும் காலை 11.00 மணிக்கு ஒளிபரப்பப்பட உள்ளது. ஆர்ட் ஆஃப் லிவ்விங் ஃபவுண்டேஷனின் நிறுவனரும், உலகமே அறிந்த மனிதாபிமானியுமான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபல தமிழ் ஆளுமைகளோடு இந்நிகழ்ச்சியில் மனம்திறந்து உரையாடவிருக்கிறார்.

  கலர்ஸ் தமிழின் பிசினஸ் ஹெட் அனூப் சந்திரசேகரன் கலர்ஸ் தமிழின் இந்த முதல் டாக் ஷோ பற்றி பேசுகையில், “ஒரு அலைவரிசையாக, அர்த்தமுள்ள மற்றும் ஒரு மாற்றத்தை உருவாக்கக்கூடிய கதைகளை சொல்வது மீது கலர்ஸ் தமிழ் எப்போதும் சிறப்பு கவனம் செலுத்தி வந்திருக்கிறது. தங்களது மனதின் உள்ளார்ந்த அமைதியை கண்டறியவும், மகிழ்ச்சியான மற்றும் மன அழுத்தம் இல்லாத வாழ்க்கையை வாழவும் எண்ணற்ற நபர்களுக்கு உதவுவதில் தி ஹார்ட் ஆஃப் லிவ்விங் ஃபவுண்டேஷன், ஆதார மையமாக இருந்து வந்திருக்கிறது.

  இந்த ஃபவுண்டேஷனின் ஒத்துழைப்புடன் இந்த செயல்பாட்டை மேற்கொள்வதிலும் மற்றும் மிக முக்கியமாக உலகெங்கும் பெரிதும் மதிக்கப்படும் ஶ்ரீஶ்ரீ ரவிசங்கர் உடன் சேர்ந்து இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதிலும் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். கலர்ஸ் தமிழின் முதன் முதல் மற்றும் புத்தம் புதிய டாக் ஷோ நிகழ்ச்சியான “சிந்தனைகள் சிம்ளிஃபைடு” என்ற இதனை ஒவ்வொரு ஞாயிறு காலைப்பொழுதிலும் கண்டு ரசிப்பதில் எமது பார்வையாளர்கள் மகிழ்ச்சியடைவார்கள் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

  அதுமட்டுமன்றி, அதிக அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்வதற்கு அவர்களுக்கு உதவக்கூடிய, வாழ்க்கைக்கு செழுமையூட்டக் கூடியதாக இதனை அவர்கள் காண்பார்கள் என்றும் நாங்கள் உறுதியாக கருதுகிறோம்,” என்று கூறினார்.

  வாழ்க்கை, உறவுகள், அனைவரையும் உள்ளடக்குவது, குடும்பம், அன்பு, காதல், வெற்றி, உடல்நலம், மனநலம், ஆன்மீகம், சிரமமான நேரங்களில் நம்பிக்கை மற்றும் தைரியம் ஆகியவை குறித்து நேர்மையான மற்றும் சிந்தனைகளை தூண்டுகின்ற உரையாடலில் ஈடுபடுவதன் மூலம் மக்கள் மனதில் ஆக்கப்பூர்வ, நேர்மறையான எண்ணங்களை மனதில் ஆழமாக பதியவைப்பதே ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், பங்கேற்கும் “சிந்தனைகள் சிம்ளிஃபைடு” என்ற பெயரிலான இந்த டாக் ஷோவின் நோக்கமாகும்.

  பிரபல ஆளுமைகளுடன் நடத்தப்படும் ஒவ்வொரு உரையாடலும் அவர்கள் மனதில் பொதிந்திருக்கும் உள்ளார்ந்த எண்ணங்களை பார்வையாளர்களும் காண்பதற்கு வழிவகுக்கும். தங்களது மறைப்புகளை களைந்துவிட்டு, மனதின் ஆழங்களில் இதுவரை அழுத்தி வைக்கப்பட்டிருந்த உணர்வுகளை வெளிப்படையாக எடுத்துரைக்கும் நிகழ்வாக இது இருக்கும். ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கையை எப்படி வாழ்வது என்பது பற்றி குருதேவ் அவருக்கே உரிய நகைச்சுவை மற்றும் அறிவார்ந்த விவேகத்தோடு பேசுகிறபோது பார்வையாளர்களது மனதில் விழிப்புணர்வு நிலையை இந்த நிகழ்ச்சி உருவாக்குவது நிச்சயம்.

  கலர்ஸ் தமிழ் அலைவரிசையில் ஆகஸ்ட் 23, ஞாயிறன்று ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியின் முதல் எபிசோடில் பிரபல நடிகரும், இயக்குநருமான கே.பாக்யராஜ் மற்றும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஆகியோர், ஆர்வமூட்டும் நல்லதொரு உரையாடலில் ஈடுபடுவது ஒளிபரப்பாகிறது.

  1 மணி நேரம் கொண்ட எபிசோடாக ஒளிபரப்பாகவிருக்கும் இந்த தொடரில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் உடன் ஒவ்வொரு ஞாயிறன்றும் வெவ்வேறு பிரபல ஆளுமைகளும் பங்கேற்கின்றனர். ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் உடன் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் முக்கிய ஆளுமைகளுள் லட்சுமி ராமகிருஷ்ணன், கௌதம் மேனன், ஆண்ட்ரியா ஜெரமையா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஆகியோரும் ஒருசிலராவர்.
  Published by:Sheik Hanifah
  First published: