ஆன்மீக அனுபவத்தை ரங்கராஜ் பாண்டே உடன் பகிர்ந்து கொண்ட ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்.. கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில்

ஆன்மீக அனுபவத்தை ரங்கராஜ் பாண்டே உடன் பகிர்ந்து கொண்ட ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்.. கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில்

சிந்தனைகள் சிம்ப்ளிஃபைடு

சிந்தனைகள் சிம்ப்ளிஃபைடு நிகழ்வில் தனது ஆன்மீகப் பயணம் குறித்து ரங்கராஜ் பாண்டே இடம் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மனம் திறந்து உரையாடுகிறார்

  • Share this:
சிந்தனைகள் சிம்ப்ளிஃபைடு நிகழ்வின் இந்தவார எபிசோடில் ரங்கராஜ் பாண்டே பங்கேற்று ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் உடன் உரையாடுகிறார். ஆன்மீகத்திலிருந்து தினசரி எதிர்கொள்ளும் தடைகள் மற்றும் சிக்கல்கள் வரை சிந்தனையை தூண்டிவிடும் உரையாடல்கள் பயனளிக்கும் ஆலோசனைகள் நிறைந்ததாக இந்த வார எபிசோட் மலர்கிறது.

உணர்வுகளை சமநிலையில் வைத்திருப்பது மற்றும் நடைமுறைக்கேற்ற சிந்தனை ஆகியவை மீது ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் எண்ண அலைகளை ரங்கராஜ் பாண்டே சேகரித்து வெளிக்கொணரும் நிகழ்வாக இது இருக்கிறது. செப்டம்பர் 27-ம் தேதி ஞாயிறன்று கலர்ஸ் தமிழில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

ஒரு பயணத்தின் தொடக்கம்:  குழந்தைப் பருவ நாட்களிலிருந்து ஆன்மீக விழிப்புணர்வு பற்றி வியப்பூட்டும் கடந்தகால வரலாற்று நிகழ்வுகளை ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பகிர்ந்து கொள்கின்ற இந்நிகழ்வில், இந்த ஆன்மீக பயணத்தை அவர் தொடங்க முற்பட்டபோது எதிர்கொள்ள வேண்டியிருந்த பல்வேறு சவால்கள் பற்றி ரங்கராஜ் பாண்டே அவரிடம் கேள்விகளை அடுக்குகிறார்.

இக்கேள்விகளுக்கு மனம்திறந்து ஒளிவுமறைவின்றி பதிலளிக்கின்ற ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், அவரது குடும்பத்தின் ஆதரவோடு இந்த ஆன்மீக விழிப்பினை உருவாக்கிய அவரது வாழ்க்கையில் நிகழ்ந்த பல்வேறு நிகழ்வுகள் மற்றும் தருணங்களின் வழியே ரங்கராஜ் பாண்டேவை உடன் அழைத்துக்கொண்டு பயணிக்கிறார்.

சௌகரியமும், கலாச்சாரமும்:  இளவயது நாட்களில் மற்ற இளைஞர்களைப்போல ஒரு துரிதவேக வாழ்க்கையை வாழ இயலாமல் தவறவிட்டது குறித்து ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை ரங்கராஜ் பாண்டே கேள்விகளால் துளைக்கின்றபோது இந்த உரையாடலில் வியப்பூட்டும் திருப்பம் ஏற்படுகிறது.

தனது கல்லூரி நாட்களில் நடந்த நிகழ்வுகள் குறித்து குருதேவ் பகிர்ந்து கொள்கிறபோது அவரது சுவிட்சர்லாந்து நாட்டு பயணத்தின்போது நிகழ்ந்த ஒரு குறிப்பிட்ட சம்பவத்தை நினைவுகூறுகிறார்.

அங்கு ஆடை அணிகின்ற பழக்கத்திலிருந்து விலகி, அதை சாவலுக்கு உட்படுத்தும் வகையில் தனது சௌகரியத்திற்காக ஜுரிச் நகரில் வேட்டியை அணிந்துகொண்டு உலவிய சம்பவம் இப்போதும் வியப்பூட்டும்.

மனதின் விஷயங்கள்: மனதின் விஷயங்களை நோக்கி நகரும் இந்த வார எபிசோடில் மூளை / அறிவு மற்றும் மனதிற்கு இடையே சமநிலையை பேணுகின்ற அதே நேரத்தில் வாழ்க்கையை மாற்றுகின்ற முடிவுகள் குறித்து ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் உடன் ரங்கராஜ் உரையாடுகிறார்.

இதயமும், மூளையும் ஏன் இரு துருவங்களாக மோதலில் இருக்கின்றன என்பது பற்றி அழகாக விளக்கமளித்து அவைகளை நேர்த்தியாக வேறுபடுத்திக்காட்டும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், இந்த இரு மாறுபட்ட நிலைகளை தியானத்தின் வழியாக ஒரு எப்படி சிறப்பாக சமநிலைப்படுத்த முடியும் என்று விளக்குகிறார். இந்த மிக ஆழமான சிந்தனைகளின் பரிமாற்றமாக இந்த எபிசோடு திகழ்கிறது என்பதில் ஐயமில்லை.
Published by:Sheik Hanifah
First published: