கலர்ஸ் தமிழில் மைல்கல்லை எட்டிய இரண்டு மெகா தொடர்கள்..

கலர்ஸ் தமிழில் மைல்கல்லை எட்டிய இரண்டு மெகா தொடர்கள்..

கலர்ஸ் தமிழ் சீரியல்

ஆரம்பித்த சில நாட்களிலேயே ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்றது கலர்ஸ் தமிழ் சீரியல்கள்.

 • Share this:
  கலர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பாகும் இதயத்தை திருடாதே, உயிரே மற்றும் அம்மன் ஆகிய மூன்று தொடர்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று உயிரே தொடர் 300 எப்பிசோட்களையும், அம்மன் தொடர் 250 எப்பிசோட்களையும் தொட்டு பலரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

  சினிமாவில் நாம் பிரபலங்கள் என்று நாம் அழைப்பது சின்னத்திரை, பெரியத்திரை பிரபலங்களைதான். பெரியத்திரை பிரபலங்களை விட சின்னத்திரை பிரபலங்களுக்கு தற்போது மவுஸ் கூடி வருகிறது. தற்போதைய கொரோனா லாக்டவுன் காலத்தில் சீரியல் பார்க்காதவர்கள் கூட பார்க்க ஆரம்பித்துவிட்டனர். சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் இப்படி அனைத்து முன்னணி சேனல்களிலும் சீரியலுக்கு பஞ்சமே இல்லை என்றுதான் கூற வேண்டும்.

  அந்த வகையில் இந்த ஆண்டு கலர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பாக தொடங்கிய மூன்று தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஜனவரி 2 ஆம் தேதி தொடங்கப்பட்ட‘உயிரே’ தொடர், இந்த வாரம் 250 எப்பிசோட்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. இந்த தொடர் திங்கள் முதல் சனி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிப்பரப்பு செய்யப்படுகிறது.

  ஜனவரி 27 ஆம் தேதி தொடங்கப்பட்ட தொடரான ‘அம்மன்’  வெற்றிகரமாக 300 எபிசோட்களை கடந்து மைல்கல்லை தொட்டுள்ளது. இந்த தொடர் திங்கள் முதல் சனி வரை இரவு 7.30 மணிக்கு ஒளிப்பரப்பு செய்யப்படுகிறது. இதை தொடர்ந்து கல்ர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பாகும் இதயத்தை திருடாதே, மாங்கல்ய தோஷம் ஆகிய இரண்டு தொடர்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

  ஏற்கனவே கலர்ஸ் தழிழில் 2018 ஆண்டில் ஒளிப்பரப்பான திருமணம் என்ற தொடர் பெரும் வரவேற்பை பெற்றதை நாம் அறிவோம். இந்த கொரோனா லாக்டவுனில் இந்த திருமணம் தொடர் ரசிகர்களின் வேண்டுக்கோளுக்கு இணங்க மீண்டும் ஒளிபரப்பு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Tamilmalar Natarajan
  First published: