Colors Tamil : கலர்ஸ் தமிழ் சீரியல் நடிகை ரேஷ்மாவுக்கு விரைவில் திருமணம்..அவரே சொன்ன அப்டேட்..

ரேஷ்மா- மதன் பாண்டியன்

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அபி டெய்லர் சீரியலில் நடித்து வரும் ரேஷ்மா முரளிதரன் விரைவில் தனது காதலனான மதன் பாண்டியனை திருமணம் செய்துக் கொள்ளபோவதாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் குறிப்பிட்டுள்ளார்.

  • Share this:
கேரளாவைச் சேர்ந்த நடிகை ரேஷ்மா முரளிதரன், முதலில் மாடலிங் துறையில் கால்பதித்தார். 2016 ஆம் ஆண்டு நடந்த மிஸ் மெட்ராஸ் போட்டியில், மூன்றாவது இடத்தைப் பிடித்தார். சென்னையில் நடந்த ஃபேஷன் ஷோவில் பிரபலமான இவருக்கு சின்னத்திரை வாய்ப்பு கிடைத்தது. முதல் முதலாய் டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற ரியாலிட்டி நடன நிகழ்ச்சியில் பங்கேற்றார். இவரின் நடிகையாக அறிமுகமான முதல் ஜீ தமிழின் பூவே பூச்சூடவா சீரியல் தான்.

பூவே பூச்சூடவா சீரியல் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் சக்தி என்ற பாத்திரத்தில் நடித்து வரும் ரேஷ்மா முரளிதரன் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளார். துறுத்துறுவென இருக்கும் சக்தியை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போனது. சீரியலும், 1000 எபிசொடுகளைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.இந்நிலையில், ரசிகர்களுக்கு இரண்டு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளார். முதலாவது, கலர்ஸ் தமிழின் புதிய சீரியலான அபி டெயிலரஸ் என்ற சீரியலில், அபியாக நடிப்பது ரேஷ்மா முரளிதரன். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, வேறு எந்த சீரியலிலும், நிகழ்ச்சியிலும் கமிட் ஆகாத ரேஷ்மா, தற்போது கலர்ஸ் தமிழ் சீரியலில் நடிப்பது சின்னத்திரை ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

Also Read : கண்ணன் - ஐஸ்வர்யா ரகசிய திருமணம்..அடுத்து நடக்கப்போவது என்ன ?அதே போல, பூவே பூச்சூடவே சீரியலில் உடன் நடித்த மதன் பாண்டியன் என்ற நடிகரை காதலித்து வந்த ரேஷ்மா முரளிதரன். விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார். இருவரும் தங்கள் காதலை சின்னத்திரை ரசிகர் வட்டாரத்தில் தெரியப்படுத்திய போது, வாழ்த்து மழையில் நனைந்தனர். இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக வருகின்றன. இந்நிலையில், தனது திருமணம் பற்றிய செய்தியை பகிர்ந்துள்ளார் ரேஷ்மா.

Also Read : ரியாலிட்டி ஷோக்களில் என்ட்ரி கொடுக்கும் வெள்ளித்திரை பிரபலங்கள்!

சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவ் ஆக இயங்கி வரும் ரேஷ்மா முரளிதரன், ரசிகர்களோடு அவ்வபோது கலந்துரையாடுவர். அப்போது, ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த ரேஷ்மா, தனது இன்ஸ்டாகிராம் கணக்கில், விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக பதில் கூறி ஸ்டேடஸ் வைத்துள்ளார்.மதன் பாண்டியன் சின்னத்திரைக்கு மிகவும் பரிச்சயமான முகம். விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் சீரியலில் அறிமுகமானவர் மதன் பாண்டியன். பூவே பூச்சூடவா சீரியலில் சுந்தர் என்ற பாத்திரத்தில் நடித்து வரும் இவர், தன்னுடைய காதலைப் பற்றி இந்த ஆண்டு தொடக்கத்தில் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார்.

“இந்த ஆண்டு எங்களுக்கு மிகவும் சிறப்பானது. எனக்கு ரொம்ப ஸ்பெஷலான நபர், இனி என்றென்றும் என்னவளாகிறார். உங்கள் அன்பும் ஆசீர்வாதங்களும் தேவை” என்று மகிழ்ச்சியுடன் பகிர்ந்தார். தற்போது, ரேஷ்மாவும் விரைவில் திருமணத் தேதி அறிவிக்க இருப்பதாகக் கூறியுள்ளார். இவர்களின் திருமணம் பற்றிய தகவல் அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Tamilmalar Natarajan
First published: