HOME»NEWS»ENTERTAINMENT»colors tamil new show bajan samrat r ganesh mahathi scs

பக்தி சார்ந்த ரியாலிட்டி ஷோ: கலர்ஸ் தமிழின் பஜன் சாம்ராட்..

2021 ஜனவரி 10-ம் தேதி முதல் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. 

பக்தி சார்ந்த ரியாலிட்டி ஷோ: கலர்ஸ் தமிழின் பஜன் சாம்ராட்..
பஜன் சாம்ராட்
  • Share this:

பஜன் சாம்ராட் என்ற பெயரில் முதன் முறையாக பக்தி சார்ந்த ஒரு ரியால்டி நிகழ்ச்சியை கலர்ஸ் தமிழ் சேனல் விரைவில் தொடங்கவிருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கும் பஜனை பாடகர்களுக்கு ஒரு தனித்துவமான தளத்தினை வழங்க கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி திட்டமிட்டுள்ளது. மனதிற்கு அமைதி தரும் பாடல்கள் மற்றும் பஜனை கீர்த்தனைகளை பார்வையாளர்களுக்கு வழங்குவதோடு நிறுத்திக் கொள்ளாமல், பஜனை பாடல்களின் வேறுபட்ட வெவ்வேறு வகைகளை விளக்கமாக எடுத்துக்கூறுவதே இந்நிகழ்ச்சியின் நோக்கமாம்.

2021 ஜனவரி 10-ம் தேதி முதல் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.  ஒவ்வொரு நாள் காலைப் பொழுதையும் தெய்வீக தன்மையுடன் தொடங்கும் பொருட்டு, காலை 8 மணிக்கு இந்த ரியால்டி நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

கோவிட்-19க்கான பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றி பஜன் சாம்ராட் நிகழ்ச்சிக்கான திறன் தேர்வுகள் மெய்நிகர் முறையில் நடத்தப்பட்டு,  24 குழுக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. வாழ்க்கையின் பல்வேறு நிலைகளைச் சேர்ந்த போட்டியாளர்களை இந்த குழுக்கள் கொண்டிருக்கும். இதில் பங்கேற்கும் ஒவ்வொரு குழுவும் அதற்கென உத்வேகமளிக்கும் வரலாற்றையும், பாரம்பரியத்தையும் கொண்டிருக்கிறது.



வி.ஜே.பிரியதர்ஷினி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி 9 வாரங்கள் ஒளிபரப்பாகும். இதில் வெற்றிபெறும் முதல் மூன்று குழுக்களுக்கு ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட உள்ளன. கர்நாடக இசை உலகத்தின் இரு பிரபல ஆளுமைகளான டாக்டர். ஆர் கணேஷ் மற்றும் மஹதி இந்நிகழ்ச்சியின் நடுவர்களாக செயல்படுகிறார்கள். இவர்களோடு கூடுதலாக வாரம் முழுவதும் எண்ணற்ற பிரபல ஆளுமைகளும் விருந்தினர்களாக கலந்துகொள்ளவிருக்கின்றனர்.

கலர்ஸ் தமிழ், கீழ்க்கண்ட அனைத்து முன்னணி வலையமைப்புகளிலும் மற்றும் அனைத்து டிடிஹெச் தளங்களிலும் கிடைக்கிறது. சன் டைரக்ட் (CH NO 128), டாடா ஸ்கை (CHN NO 1515), ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN NO553).
Published by:Shalini C
First published: