கலர்ஸ் தமிழின் கோடீஸ்வரி - டிசம்பர் 23 முதல்....

கலர்ஸ் தமிழின் கோடீஸ்வரி - டிசம்பர் 23 முதல்....

பெண்களுக்காக பிரத்யேகமாக தமிழிலும் கோடீஸ்வரி விளையாட்டு நிகழ்ச்சி "கலர்ஸ் தமிழ்" தொலைக்காட்சியில் கடந்த 23-ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது இந்நிகழ்ச்சியை நடிகை ராதிகா சரத்குமார் தொகுத்து வழங்குகிறார்.

 • Share this:
  ஆசியாவிலேயே முதல்முறையாக பெண்களுக்கான கோடீஸ்வரி நிகழ்ச்சி "கலர்ஸ் தமிழ்" தொலைக்காட்சியில் வரும் 23ம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ளது. இந்நிகழ்ச்சியை பிரபல நடிகை ராதிகா தொகுத்து வழங்குகிறார்.

  நடிகர் அமிதாப் பச்சன் நடத்திய கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியைப் போல் தமிழிலும் கோடீஸ்வரி விளையாட்டு நிகழ்ச்சி பெண்களுக்காக பிரத்யேகமாக "கலர்ஸ் தமிழ்" தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது.

  இந்த நிகழ்ச்சியில் ஆசியாவிலேயே முதல் முறையாக, பல அம்சங்கள் இடம்பெறப்போவது சிறப்பு என்றார் தொலைக்காட்சியின் வர்த்தப் பிரிவுத் தலைவர் அனூப் சந்திரசேகர்.

  பெண்களின் கனவுகளை நிறைவேற்றுவதில் தான் ஒரு கருவியாக இருக்கப்போவதில் மகிழ்ச்சி என தொகுப்பாளர் ராதிகா சரத்குமார் கூறினார்.

  அமிதாப் போல் ஆவதே தன் கனவு எனக் கூறிய ராதிகா, அவர் அனுப்பிய வாழ்த்துச் செய்தியையும் பகிர்ந்து கொண்டார்.

  கோடீஸ்வரி நிகழ்ச்சியில் 3 ஆயிரம் பெண்கள் முதல் கட்ட சுற்றுகளில் பங்கேற்றனர். இதில் இறுதிக்கட்ட போட்டியில் விளையாட 120 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வயாகாம் 18ன் "VOOT" ஆப் மூலமாகவும் இந்த ஷோவை பார்க்கலாம்.. பங்கேற்கவும் செய்யலாம்.

  இது குறித்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய கலர்ஸ் தமிழ் வர்த்தகப் பிரிவு தலைவர் அனூப் சந்திரசேகர், "எப்பொழுதும் மற்றவருக்காக வாழும் பெண்களின் சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்ற இந்த ஷோ வடிவமைக்கப்பட்டுள்ளது. 1999 முதல் 135 நாடுகளில் இந்த ஷோ நடைபெற்று வருகிறது. ஆனால் இது தான் முதல் தடவை பெண்கள் மட்டுமே பங்குபெறும் நிகழ்ச்சி நடைபெறுவது. இந்நிகழ்ச்சியை தொகுக்கும் முதல் ஆசிய பெண் ராதிகா சரத்குமார் தான். பார்வையாளர்களுக்கு கேள்வி கேட்டு பதிலளிக்கும் நபருக்கு பரிசு உண்டு.” என்றார்.


  சோனி பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு பிரிவான ஸ்டுடியோ நெக்ஸ்ட் இந்நிகழ்ச்சியை தயாரிக்கிறது. அதன் சார்பாக அர்ஜூன் கார்த்திகேயன் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டார்.


  இந்நிகழ்ச்சி குறித்து ராதிகா சரத்குமார் பேசும்போது "தொகுப்பாளராக முதல் அனுபவம் எனக்கு. பெண்களின் ஆசைகள் நிறைவேற்ற சின்ன கருவியாக நான் இருக்கிறேன். கனவுகளை நிஜமாக உழைக்க வேண்டும். தனிப்பட்ட மனிதராக அமிதாப் பச்சன் உச்சத்தையும் பார்த்துள்ளார், வீழ்ச்சியையும் பார்த்துள்ளார். அவரை போல் தைரியமாக இருக்க வேண்டும் என்று எனக்கு ஆசை. அவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியை நான் தொகுப்பதில் மிகவும் மகிழ்ச்சி. அமிதாப் பச்சன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதை பார்த்து கற்று கொண்டேன். அவர் எனக்கு வாழ்த்து தெரிவித்திருப்பது மேலும் மகிழ்ச்சியாக உள்ளது" என்றார்.

   

  Published by:Yuvaraj V
  First published: