கலர்ஸ் தமிழின் காதலர் தின சிறப்பு நிகழ்ச்சிகள்!

கலர்ஸ் தமிழின் காதலர் தின சிறப்பு நிகழ்ச்சிகள்!

கலர்ஸ் தமிழ் சிறப்பு நிகழ்ச்சிகள்

பிப்ரவரி 13 முதல் 15 வரை ’இதயத்தை திருடாதே’ மற்றும் ’சில்லுனு ஒரு காதல்’ ஆகிய 2 காதல் கதைகள் ஒளிபரப்பாகின்றன.

  • Share this:
    கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் பிப்ரவரி 13 முதல் 15 வரை மாலை 8 மணிக்கு காதலர் தின சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகவிருக்கின்றன.

    கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் பிப்ரவரி 13 முதல் 15 வரை ’இதயத்தை திருடாதே’ மற்றும் ’சில்லுனு ஒரு காதல்’ ஆகிய 2 காதல் கதைகள் ஒளிபரப்பாகின்றன. காதலர் தினத்தையொட்டி இந்த 2 தொடர்களும் திருப்பம் நிறைந்த வகையில் உங்களை மகிழ்விக்க இருக்கின்றன. இதயத்தை திருடாதே தொடரில் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் ஆதவனும், சில்லுனு ஒரு காதல் தொடரில் புகழ்பெற்ற நடிகை சஞ்சனா சிங்கும் உங்களை மகிழ்விக்க காத்திருக்கிறார்கள்.

    ’சண்டையில கிழியாத சட்டை இல்ல’ சுல்தான் ஃபர்ஸ்ட் சிங்கிள்!

    வார இறுதியில் மகிழ்ச்சியாக நேரத்தை கழிக்க, சிவாவும் சகானாவும் ஒருவருக் கொருவர் நெருங்கி வருவதை இதயத்தை திருடாதே தொடரில் பார்த்து ரசியுங்கள். இதே போல் சமீப காலமாக ஒளிபரப்பப்பட்டு வரும் சில்லுனு ஒரு காதல் தொடரில் கயல் மற்றும் சூர்யா வாழ்க்கையில் பல்வேறு புதிய திருப்பங்கள் ஏற்பட உள்ளது.

    இது குறித்து பேசிய ஆதவன், “தொலைக்காட்சி என்பது நடிகர்களையும் ரசிகர்களையும் இணைக்கும் சிறந்த ஒரு தளமாகும். கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் தொடரான இதயத்தை திருடாதே தொடர் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தருகிறது. இந்த தொடரில் சக நடிகர்களுடன் நான் நடிப்பது எனக்கு மிகுந்த உத்வேகத்தை தருகிறது. இந்த தொடரில் ஒரு சிறிய வேடத்தில் நான் நடிப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். எனது நடிப்பை ரசிகர்கள் நிச்சயம் விரும்புவார்கள் என்று நான் நம்புகிறேன்” என்றார்.

    ”கலர்ஸ் தமிழின் புத்தம் புதிய நிகழ்ச்சியான சில்லு ஒரு காதல்தொடரில் ஒரு சிறிய பாத்திரத்தில் நான் நடித்திருப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இதில் நடிக்கும் கலைஞர்கள் எவ்வாறு மாறுபட்ட உணர்ச்சிகளைக் கொண்டு வருகிறார்கள் என்பதை நான் பார்த்து மிகவும் ரசித்தேன். இந்த தொடரில் நான் நடித்திருப்பது எனக்கு நல்ல அனுபவத்தை அளித்ததோடு திறமையான கலைஞர்களுடன் நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது. எனது நடிப்பு ரசிகர்களை நிச்சயம் மகிழ்விப்பதோடு அவர்களிடம் எனக்கு நல்ல பெயரை உருவாக்கும் என்று நான் நம்புகிறேன்” என்றார் சஞ்சனா சிங்.

    இந்த காதல் தொடர்களை காண கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் 13 முதல் 15-ந்தேதி வரை மாலை 8.30 மணிக்கு பார்த்து வார இறுதியை கொண்டாடுங்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: