300 எபிசோட்களைக் கடந்த 'இதயத்தை திருடாதே' சீரியல்!

300 எபிசோட்களைக் கடந்த 'இதயத்தை திருடாதே' சீரியல்!

இதயத்தை திருடாதே

இந்த சீரியல் கடந்திருக்கிறது. இதயத்தை திருடாதே சீரியல் பிப்ரவரி 14, 2020 அன்று முதல் ஒளிபரப்பாகி வருகிறது.

 • Share this:
  கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘இதயத்தை திருடாதே’ சீரியல் தற்போது 300 எபிசோட்களைக் கடந்துள்ளது.

  தற்போதைய காலகட்டத்தில் சினிமாவுக்கு நிகராக சீரியல்கள் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அதில் நடிப்பவர்களுக்கும் வெள்ளித்திரைக்கு இணையான ரசிகர்களில் ஆதரவு கிடைக்கிறது.

  அந்த வகையில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘இதயத்தை திருடாதே’ என்ற சீரியல் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8.30 மணியிலிருந்து 9.30 மணி வரை இந்த சீரியல் ஒளிபரப்பாகிறது. ’இதயத்தை திருடாதே’ சீரியல் கடந்த டிசம்பர் 24-ல் தான் 250-வது எபிசோடை தொட்டது.  தற்போது 300-வது எபிசோடை இந்த சீரியல் கடந்திருக்கிறது. இதயத்தை திருடாதே சீரியல் பிப்ரவரி 14, 2020 அன்று முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் நவின் குமார், ஹிமா பிந்து, நிலானி, கார்த்திகா, கார்த்திக் சசிதரன், சாம், ஜெய் ஸ்ரீனிவாஸ் கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

  300 எபிசோட்களை கடந்ததற்கு ரசிகர்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்து, அதில் நடிக்கும் நடிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருக்கின்றனர். அதோடு படபிடிப்பு தளத்தில் கேக் வெட்டி இந்த மகிழ்ச்சியான தருணத்தைக் கொண்டாடியிருக்கிறார்கள்.

  இதயத்தை திருடாதே சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் நவீன், இன்ஸ்டாகிராம் லைவில் வந்து, ரசிகர்களுடன் உரையாடினார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: