• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • அம்மன் வேடத்திற்கு ரம்யா கிருஷ்ணனை விட்டால் சிறந்த நடிகை யார் இருக்கா? பிரபல சீரியல் நடிகை பாராட்டு..

அம்மன் வேடத்திற்கு ரம்யா கிருஷ்ணனை விட்டால் சிறந்த நடிகை யார் இருக்கா? பிரபல சீரியல் நடிகை பாராட்டு..

ரம்யா கிருஷ்ணன்

ரம்யா கிருஷ்ணன்

90'ஸ் கிட்ஸ்களுக்கு அம்மன் என்று சொன்னாலே பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன் மட்டுமே நினைவுக்கு வருவார்.

  • Share this:
பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களை ஒளிபரப்பி பிரபல முன்னணி சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது கலர்ஸ் தமிழ் சேனல். இந்த சேனலில் ஓடிக்கொண்டிருக்கும் பிரபல பக்தி சீரியலான அம்மன் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்று வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது திங்கள் முதல் சனி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாக துவங்கும் இந்த சீரியல், இரவு 8.30 மணி வரை சுமார் ஒன்றரை மணி நேரம் தொடர்ந்து ஒளிபரப்படுகிறது.

ரவி பிரியன் இயக்கத்தில் ஒளிபரப்பாகி வரும் அம்மன் சீரியலில் சக்தி என்ற முக்கிய கேரக்டரில் பவித்ரா கவுடா மற்றும் ஈஸ்வர் என்ற கேரக்டரில் நடிகர் அமல்ஜித், சாரதாவாக ஜெனிபர், காந்தாரியாக சுபா ரக்ஷா என பலர் நடித்து வருகின்றனர். சென்ற வருடம் ஜனவரி மாதம் துவக்கப்பட்ட இந்த சீரியல் தற்போது வரை மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், சமீபத்தில் வெற்றிகரமாக 800 எபிசோட்களை தாண்டி ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது அம்மன்.

இதனால் சீரியல் குழுவினர் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர். தனது உற்சாகத்தை பகிர்ந்து கொண்டுள்ள சீரியலின் முக்கிய நடிகர் அமல்ஜித், "அம்மன் சீரியலுக்கு ரசிகர்கள் அளித்து வரும் வரவேற்பு அமோகமாக இருக்கிறது. எங்களை அவர்கள் வீட்டில் ஒருவராக மக்கள் பார்க்கின்றனர். தியேட்டர்கள் மூடப்பட்டிருந்த நேரத்தில் எங்கள் குழுவால் முடிந்த அளவு மக்களை சின்னத்திரை வழியே என்டர்டெயின் செய்தோம்" என்றார்.

இதனை தொடர்ந்து பேசிய நடிகை பவித்ரா கவுடா, ஆடியன்ஸிற்கு புதிய அனுபவத்தை வழங்க சென்னையை சுற்றியுள்ள பல புதிய இடங்களில் சீரியல் ஷூட்டிங் நடைபெற்றதாக கூறினார். சென்னை புறநகரில் உள்ள சில காடுகளில் ஷூட்டிங் நடத்தப்பட்டதாகவும், தங்கள் குழுவினர் ப்ரொடக்ஷன் குவாலிட்டியில் சிறிதும் சமரசம் செய்து கொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டார். அதே போல முன்பு சில நெகட்டிவ் கேரக்டர்களில் நடித்திருந்ததால், என்னால் முதலில் சக்தி கேரக்டரில் உடனடியாக செட் ஆக முடியவில்லை. போக போக பழகி கொண்டேன்.

also read : யாஷிகா எப்படி இருக்கிறார்? நேரில் சந்தித்த நடிகர் கொடுத்த அப்டேட் ..



அதே போல 90'ஸ் கிட்ஸ்களுக்கு அம்மன் என்று சொன்னாலே பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன் மட்டுமே நினைவுக்கு வருவார். எனவே அம்மன் கேரக்டரில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த நடிகை ரம்யா கிருஷ்ணன் அம்மன் வேடத்தில் நடித்த வீடியோக்களை தொடர்ந்து பார்த்தேன். அம்மன் கடவுளாக அவர் வெளிப்படுத்திய நடிப்பு என்னை மிகவும் கவர்ந்தது மற்றும் ஊக்கப்படுத்தியது.

தொடர்ந்து சக்தி கேரக்டரில் நடிக்க என்னை தயார்படுத்தி கொண்டேன். உண்மையில் முதலில் நான் இந்த சீரியலில் வேறு ஒரு ரோலில் நடித்தேன். ஆனால் இயக்குனர் என்னை இந்த சீரியலில் அம்மன் வேடத்தில் நடிக்க வேண்டும் என்று கூறினார். எனவே அம்மன் வேடத்தில் நடிக்க நடிகை ரம்யா கிருஷ்ணன் தான் எனக்கு சரியான ரெஃப்ரன்ஸ் என்று நான் முடிவு செய்தேன். அவர் நடித்த படங்களை பார்த்தேன் என்றும் கூறி இருக்கிறார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: