கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அபி டெய்லர் சீரியலில் இனி ஃபரீனா நடித்து வந்த பவானி கதாபாத்திரத்தில் வேறொரு பிரபல நடிகை நடிக்க உள்ளதாக வெளியான போட்டோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
சன் டி.வி., விஜய் டி.வி, ஜீ தமிழ் ஆகிய தொலைக்காட்சிகளுக்கு இடையே போட்டி போட்டு முன்னேறி வருகிறது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி. இதில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து வருகின்றன. ஏற்கனவே கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘அம்மன் 3’, ‘இதயத்தை திருடாதே சீசன் 2’ ஆகிய சீரியல்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த பட்டியலில் இணைந்துள்ள மற்றொரு சீரியல்‘அபி டெய்லர்’.
காதல் மற்றும் குடும்ப பின்னணியை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கு இல்லத்தரசிகள் மட்டுமின்றி இளம் தலைமுறை ரசிகர்களும் ஏராளமாக உண்டு. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பூவே பூச்சூடவா’ சீரியலில் ரீல் காதலர்களாக நடித்து, நிஜத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட நாயகன், நாயகியான ரேஷ்மாவும், மதனும், கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் அபி டெய்லர் சீரியலில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
கதையின் நாயகியான அபிராமி கதாபாத்திரத்தில் ரேஷ்மாவும், ஹீரோ அசோக் கதாபாத்திரத்தில் மதனும் நடித்து வருகின்றனர். இதில் பவானி என்ற கேரக்டரில் பாரதி கண்ணம்மா புகழ் ஃபரீனா நடித்து வந்தார். ஏற்கனவே ஃபரீனா கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தறி என்ற சீரியலில் நடித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் முதல் பவானி கதாபாத்திரத்தில் ஃபரீனா நடித்து வருகிறார். இவர் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் நடிக்க ஆரம்பித்தது முதலே, பாரதி கண்ணம்மா சீரியலில் இனி நடிக்க மாட்டீங்களா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால் ஃபரீனா விஜய் டிவி மற்றும் கலர்ஸ் தமிழ் இரண்டு சேனல்களிலும் நடித்து வந்தார். இந்நிலையில் ஃபரீனா அபி டெய்லர் சீரியலை விட்டு விலகியுள்ளார். அவருக்கு பதிலாக புதிதாக நடிக்க உள்ள நடிகை பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
சத்யாவிடம் உண்மையை சொன்ன வருண்.. அடுத்து என்ன செய்ய போகிறார் ஸ்ருதி?
இனி ‘அபி டெய்லர்’ சீரியலில் ஃபரீனாவுக்கு பதிலாக கீர்த்தி என்பவர் நடிக்க உள்ளாராம். கீர்த்தி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ராஜபார்வை’ சீரியலில் பவித்ரா என்ற கேரக்டரில் நடித்ததன் மூலமாக பிரபலமானவர். அந்த தொடரில் கதாநாயகியின் தங்கையாக நடித்திருப்பார். இந்த சீரியல் மூலம் கீர்த்திக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உண்டு.
ஆனால் பாரதி கண்ணம்மா சீரியல் மூலமாக பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமான ஃபரீனாவுக்கு பதிலாக கீர்த்தி பிரகாசிப்பாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதற்கு முன்னதாக அபி டெய்லர் சீரியலில் ஹீரோ, ஹீரோயினாக நடித்து வரும் ரேஷ்மா, மதன் இருவரும் மீண்டும் ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கே திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
அந்த சேனலில் ‘பூவே பூச்சூடவா’ சீரியல் டீம் மீண்டும் புதிய சீரியலில் இணைய உள்ளதாகவும், அதில் நடிக்க ரேஷ்மா, மதனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த அதிர்ச்சியில் இருந்து ரசிகர்கள் மீளவதற்குள் அடுத்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஃபரீனா சீரியலை விட்டு விலகி இருப்பது பேரதிர்ச்சியாக அமைத்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.