ராசியில்லை, அதிர்ஷ்டமற்றவர் என்று ஒதுக்கப்பட்ட பெண்... ரியல் மகா லட்சுமியாக்கிய 'கலர்ஸ் கோடீஸ்வரி'

ராசியில்லை, அதிர்ஷ்டமற்றவர் என்று ஒதுக்கப்பட்ட பெண்... ரியல் மகா லட்சுமியாக்கிய 'கலர்ஸ் கோடீஸ்வரி'

கலர்ஸ் கோடீஸ்வரி

 • Share this:
  இந்தியாவின் மிகப்பெரிய பரிசுத்தொகை வழங்கும் கேம்ஷோ கோடீஸ்வரி நிகழ்ச்சி கலர்ஸ் தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. நடிகை ராதிகா சரத்குமார் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார்.

  பெண்கள் மட்டுமே பங்கேற்கும் பிரத்யேக நிகழ்ச்சியான கோடீஸ்வரியில், திருச்சியை சேர்ந்த 36 வயது மகாலட்சுமி கலந்துகொண்டு 25 லட்ச ரூபாய் பரிசுத் தொகையினை வென்றுள்ளார்.  நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த இவர் சிறுவயதில் இருந்தே ராசி இல்லாத பெண் குழந்தை மற்றும் அதிர்ஷ்டமற்றவர் என அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களால் முத்திரை குத்தப்பட்டவர்.

  திருமணத்திற்குப் பிறகும் இதேபோல தன் கணவராலும் நடத்தப்பட மிகுந்த மன வேதனையில் இருந்து வந்தார். இந்நிலையில், தான் ஒரு துரதிர்ஷ்டசாலி இல்லை என்பதை நிரூபிப்பதற்கு அவருக்குக் கிடைத்த வாய்ப்பாக கோடீஸ்வரி நிகழ்ச்சியைப் பயன்படுத்திக் கொண்டார்.  12ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள மகாலட்சுமி, தன் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லித் தந்ததின் மூலம் 13 கேள்விகளுக்கு சரியாக பதில் சொல்லி 25 லட்ச ரூபாய் பரிசினை வென்றுள்ளார்.  தன் பெயருக்கேற்றார்போல் தான் உண்மையிலே மகா லட்சுமி தான் என்பதை கோடீஸ்வரி மூலம் நிரூபித்துள்ள அவர், "கோடீஸ்வரி நிகழ்ச்சிக்கு வரும்பொழுது யாரும் எனக்கு ஊக்கப்படுத்தவில்லை எனது தன்னம்பிக்கையால் ஹாட்சீட்டுக்கு வந்து, நான் அதிர்ஷ்டசாலி என்று நிரூபித்து உள்ளேன். இந்த நிகழ்ச்சியில் வருவதற்கு காரணம் பணம் மட்டுமல்ல பெண்களால் எதையும் சாதித்துக் காட்ட முடியும் என்ற உண்மையை புரியவைக்கவும் தான்" என்கிறார்.

  மகாலட்சுமி பங்கேற்ற நிகழ்ச்சியை காண இங்கே கிளிக் செய்க.
  Published by:Vijay R
  First published: