ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மம்முட்டிக்கு சொந்தமான ‘369’ எண் கொண்ட கார்கள் - இணையத்தில் வைரல்!

மம்முட்டிக்கு சொந்தமான ‘369’ எண் கொண்ட கார்கள் - இணையத்தில் வைரல்!

நடிகர் மம்மூட்டி

நடிகர் மம்மூட்டி

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தனது முதல் காரன மாருதி 800 காரை வாங்கி அன்பை வெளிப்படுத்தினார் மம்முட்டி.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

மம்முட்டியின் "369" எண் கொண்ட நான்கு சக்கர வாகனங்கள் குறித்து தான் இணையத்தில் தற்போது பேசப்பட்டு வருகிறது

திரைத்துறையில் மம்மூட்டியின் புகழ் உச்சத்தில் உள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 300க்கும் மேற்பட்ட படங்களை நடித்துள்ள அவர், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி படங்களிலும் நடித்துள்ளார். ஆனால் சமீபத்தில் அவர் வேறு காரணத்திற்காக பிரபலமாகி வருகிறார்.

ஆம், மம்முட்டியின் "369" எண் கொண்ட நான்கு சக்கர வாகனங்கள் குறித்து தான் இணையத்தில் தற்போது பேசப்பட்டு வருகிறது. மெகா ஸ்டார் மம்மூட்டி கேஜெட் மற்றும் ஆட்டோமொபைல் துறையில் ஆர்வமாக இருக்கிறார். ஆனால் தற்போது அவர் 369 காருக்கு சொந்தக்காரர் என்று இணையதளத்தில் வதந்திகள் பரவி வருகின்றன.

தனக்குச் சொந்தமான கார்களின் எண்ணிக்கையுடன் 369 என்ற எண்ணிற்கும் அதிக தொடர்பு இல்லை என்று மலையாள சூப்பர் ஸ்டாரான மம்முட்டி தெரிவித்துள்ளார். அவர் தனது அனைத்து நான்கு சக்கர வாகனங்களிலும் '369' என்று பெயரிட்டுள்ளார். மேலும் ஒவ்வொரு காரின் நம்பர் பிளேட்டிலும் ஒரு தனித்துவமாக தெரிவதற்காக 369 என்ற எண்ணை குறித்துள்ளதாக அவர் தகவல் அளித்துள்ளார்.

அவரது ஆடம்பரமான கார் சேகரிப்பில் பி.எம்.டபிள்யூ, இ 46 எம் 3, மினி கூப்பர் எஸ், ஜாகுவார் எக்ஸ்ஜே, டொயோட்டா லேண்ட் குரூசர், ஆடி ஏ 7, மிட்சுபிஷி பஜெரோ ஸ்போர்ட், டொயோட்டா பார்ச்சூனர் போன்ற கார்களும் அடங்கும். இருப்பினும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தனது முதல் காரன மாருதி 800 காரை வாங்கி அன்பை வெளிப்படுத்தினார்.

ஆட்டோமொபைல்களின் மிகப்பெரிய ஆர்வத்தை தவிர, நடிகர் தனது விலையுயர்ந்த கேஜெட்கள் மீதான ஆர்வத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். AI- உடன் இணைக்கப்பட்ட Conon EOs R5 கேமரா அவரது சேகரிப்பில் சமீபத்தியது. "1996ம் ஆண்டில் திரைப்பட தயாரிப்பாளரான துளசிதாஸ் "ஆயிரம் நாவுல்லா அனந்தனின்" படத்தின் செட்டில் ஒரு மோட்டோரோலா மொபைல் கைபேசியை கொண்டு வந்ததை மம்முட்டி பகிர்ந்துள்ளார். ஒரு காலத்தில் மொபைல் போன் வைத்திருப்பது கூட ஒரு நடிகருக்கு அரிய விஷயம்தான்" என்று கூறியுள்ளார்.

நடிகர் மம்மூட்டியை போல, அவரது மகனான நடிகர் துல்கர் சல்மானும் பெருமை வாய்ந்த நான்கு சக்கர வாகனங்களின் உரிமையாளர். சமீபத்தில் இணையத்தில் வெளிவந்த ஒரு வீடியோவில், துல்கர் மற்றும் நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் ஒரு போர்ஷே மற்றும் ஒரு லம்போர்கினியை ஓட்டுவதைக் காணமுடிந்தது.

அவர்கள் அதிக வேகத்தில் சென்றதாக குற்றம் சாட்டப்பட்டதால், அந்த வீடியோ மோட்டார் வாகனத் துறையால் விசாரிக்கப்பட்டது. ஆனால் பின்னர் அவர்கள் நிரபராதிகள் என்று நிரூபிக்கப்பட்டது.

மேலும், சமீபத்தில் நடிகர் மம்முட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சரிபார்க்கப்பட்ட வயதைக் குறிக்கும் செல்பி ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படமும் எப்போதும் போல புயலாய் இணையத்தில் பரவியது. அந்த மொபைல் சாம்சங் எஸ் 20 அல்ட்ரா மாடல் என்பதும் மொபைல் உடைய விலை கிட்டத்தட்ட ரூ. 1 லட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Cinema