• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Cold Case: கோல்ட் கேஸ் - விறுவிறுப்பான ஹாரர் இன்வெஸ்டிகேடிவ் த்ரில்லர்...!

Cold Case: கோல்ட் கேஸ் - விறுவிறுப்பான ஹாரர் இன்வெஸ்டிகேடிவ் த்ரில்லர்...!

கோல்ட் கேஸ்

கோல்ட் கேஸ்

பிருத்விராஜ் கடைசியாக நடித்த படங்களில் அய்யப்பனும் கோஷியும், டிரைவிங் லைசென்ஸ் இரண்டும் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றன.

  • News18
  • Last Updated :
  • Share this:
பிருத்விராஜ் நடித்திருக்கும் கோல்ட் கேஸ் இன்று அமேசான் பிரைமில் வெளியானது. திரையரங்கில் வெளியாகாமல் நேரடியான ஓடிடி வெளியிடப்பட்டுள்ளது. 

பிருத்விராஜ் கடைசியாக நடித்த படங்களில் அய்யப்பனும் கோஷியும், டிரைவிங் லைசென்ஸ் இரண்டும் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றன. கோல்ட் கேஸ் எப்படி? ரசிகர்களை கவர்ந்திருக்கிறதா என்பதை பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பல வருடங்களாக கண்டுபிடிக்கப்படாமல் விசாரணை முடித்து வைக்கப்பட்ட வழக்குகளை கோல்ட் கேஸ் என்பார்கள். இந்த கோல்ட் கேஸ்களை வைத்தே பல படங்கள் வந்துள்ளன. கீப்பர் ஆஃப் லாஸ்ட் காசஸ் ட்ரையாலஜி சிறந்த உதாரணம். இதில் வருவது கண்டுப்பிடிக்கப்படாமல் கைவிடப்பட்ட கேஸ் அல்ல. ஒரு வருடத்துக்கு முன்னால் நிகழ்ந்த, யாருடைய பார்வைக்கும் படாமல் போன ஒரு கொலை

கேரி பேகில் சுற்றப்பட்ட ஒரு மண்டையோடு கிடைக்கிறது. அதன் பின்னணியை அசிஸ்டெண்ட் கமிஷனரான பிருத்விராஜ் தலைமையிலான போலீஸார் விசாரிக்கிறார்கள். அதேநேரம், புதிதாக வாடகை வீட்டிற்கு தனது மகளுடன் குடிவரும்; டிவி நிருபரான அதிதி பாலனுக்கு அந்த வீட்டில் அமானுஷ்யமான சில சம்பவங்கள் நடக்கின்றன. பிருத்விராஜ் தனக்குக் கிடைக்கிற தடயங்களை வைத்து ஒருபக்கம் முன்னேற, அதிதி பாலன் தனக்குக் கிடைக்கிற க்ளூக்களை கொண்டு இன்னொருபுறம் விசாரிக்கிறார். இன்வெஸ்டிகேஷன், ஹாரர் என சம்பந்தமில்லாத இரு ட்ராக்குகளில் பயணிக்கும் கதை ஒருகட்டத்தில் ஒன்றா இணைகிறது

இது ஹாரர் படமா இல்லை துப்பறியும் சஸ்பென்ஸ் த்ரில்லரா என்று கேட்டால், இரண்டும்தான். இதுதான் இந்தப் படத்தின் சிறப்பும், சறுக்கலும். ஒரேயொரு மண்டையோட்டை வைத்து தடவியல் நிபுணர்களின் உதவியுடன் பிருத்விராஜ் ஒவ்வொரு க்ளூவாக கண்டடைவதை சிறப்பாக காட்டியிருக்கிறார்கள். படத்தின் மொத்த சுவாரஸியமும் இதில்தான் இருக்கிறது. மறுபுறம், அதிதி பாலனுக்கு ஏற்படும் அமானுஷ்ய சம்பவங்கள் முதலில் பயமுறுத்தினாலும், போகப் போக ஒரேயிடத்தில் தங்கிப்போன உணர்வையே தருகிறது.

வீட்டில் அமானுஷ்ய சத்தத்தை கேட்டாலே பதறி ஓடுவோம். அதிதி பாலனின் வீடு முழுக்க தண்ணீர் பரவுகிறது, குழந்தை அழும் சத்தம் கேட்கிறது, ஃப்ரிட்ஜ் தானாக ஆடுகிறது. ஆனாலும், விடாப்பிடியாக குழந்தையுடன் அந்த வீட்டிலேயே இருக்கிறார். அவர் ஒரு இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிஸ்ட்; என்றாலும் நம்புகிற மாதிரி இல்லை. வீட்டிற்குள் தண்ணி வந்தது எப்படி என்பதைக்கூடவா பார்க்காமல், வேலைக்காரியிடம் அலட்சியமாக, போய் தூங்கு என்பார்?

Also read... OTT: இந்த படங்கள் எல்லாம் OTT-க்கு செல்கிறதா? திரையரங்கு உரிமையாளர்கள் அதிர்ச்சி!

நடந்தது வெறும் கொலை அல்ல, அதையும் மீறிய விஷயங்கள் நடந்திருக்கின்றன என்பது கூடுதல் சுவாரஸியத்தை தருகிறது.  கொரோனா லாக்டவுனை வைத்து கதையின் முக்கிய மர்மத்தை அறிந்து கொள்வது சுவாரஸியம். தேவையில்லாத கதாபாத்திரங்களை கத்தரித்து, மெயின் கதையை இன்னும் விஸ்தீரணமாக சொல்லியிருந்திருக்கலாம்

பிருத்விராஜ் அசிஸ்டெண்ட் கமிஷனராக இயக்குனர் வரைந்த கோட்டில் நடித்திருக்கிறார். அதிதி பாலன், வழக்கறிஞராக வரும் லஷ்மி ப்ரியா, குடிகார மாமாவாக வரும் அலென்சியர் என அனைவரும் பாத்திரத்துக்கேற்ற நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். ஹாரர் பகுதியில் இசை பயமுறுத்துகிறது. ஒளிப்பதிவும், எடிட்டிங்கும் கதைக்கு எந்த உறுத்தலும் இல்லாமல் பொருந்திப் போகின்றன. பேயா இல்லை சயின்ஸா என்ற கேள்வியுடன் படத்தை முடித்திருப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தாலும் கிளைமாக்ஸ் எந்த இம்பேக்டும் இல்லாமல் முடிந்தது ஏமாற்றமே. இவ்வளவு திருப்பங்கள் கொண்ட கதையில் தேவையில்லாமல் எதற்கு அமானுஷ்யம் என்று நமக்கு தோன்றுவதுதான் படத்தின் மைனஸ்.

சின்னச் சின்ன நெருடல்கள் இருந்தாலும் கோல்ட் கேஸ் சுவாரஸியமான ஹாரர் இன்வெஸ்டிகேடிவ் த்ரில்லர், கண்டிப்பாகப் பார்க்கலாம்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: