முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாகும் கோயம்புத்தூர் மாடல்!

ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாகும் கோயம்புத்தூர் மாடல்!

ஜி.வி.பிரகாஷ் | திவ்ய பாரதி

ஜி.வி.பிரகாஷ் | திவ்ய பாரதி

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தில் திவ்ய பாரதி நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்த ஜி.வி.பிரகாஷ், ஹீரோவாக நடித்து தனக்கான ஒரு இடத்தைப் பிடித்துள்ளார். 2018-ம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியான சர்வம் தாள மயம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து வெளியான ஒரு சில படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாத நிலையில் கடந்தவாரம் வெளியான சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. சசி இயக்கியுள்ள இந்தப்படத்தில் ஸ்ட்ரீட் ரேஸராக ஜி.வி.பிரகாஷ் நடித்திருந்தார்.

இந்தப் படத்தை அடுத்து ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகவுள்ள புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆக்சஸ் ஃபிலிம் பேக்டரி தயாரிக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சதீஷ் செல்வகுமார் இயக்குகிறார். இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடிக்க கோயம்புத்தூரைச் சேர்ந்த மாடல் திவ்யபாரதி ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தின் மூலம் திவ்யபாரதி தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகிறார்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நாளை வெளியிடுகிறார்.

வீடியோ பார்க்க: அடுத்து என்ன செய்ய போகிறார் ரஞ்சித்?

First published:

Tags: Gv praksh kumar