கணித மேதையாக நடித்திருக்கும் விக்ரமின் ‘கோப்ரா’ டீசர் ரிலீஸ்

Youtube Video

கோப்ரா திரைப்படத்தின் டீசரை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டுள்ளார்.

  • Share this:
நடிகர் விக்ரம் ‘கடாரம் கொண்டான்’ திரைப்படத்தை அடுத்து அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகும் இத்திரைப்படத்தில் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் நடிகராக அறிமுகமாகிறார்.

ஸ்ரீநிதிஷெட்டி விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கிறார். கடந்த பிப்ரவரி மாதத்தில் இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. அதில் 7 கெட்டப்புகளில் விக்ரம் காட்சியளித்திருந்தார்.

இதையடுத்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் படத்தில் இடம்பெற்ற ‘தும்பி துள்ளல்’ என்ற பாடல் மற்றும் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்த இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினர், ஜனவரி 9-ம் தேதி படத்தின் டீசரை ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிடுவார் என்ற ஸ்பெஷலான அறிவிப்பையும் வெளியிட்டது. அதன்படி இன்று டீசர் வெளியிடப்பட்டுள்ளது.அதிரடி, ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்திருக்கும் டீசரில் கணித கோட்பாடுகளை பயன்படுத்தி குற்றம் செய்பவராக நடித்து அசத்தியிருக்கிறார் விக்ரம். அவருக்கு வில்லனாக தோன்றியுள்ளார் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான். 1 நிமிடம் 47 விநாடிகள் நீளம் கொண்ட கோப்ரா டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் என இரண்டு வெற்றிப்படங்களைத் தொடர்ந்து விக்ரமுடன் அஜய் ஞானமுத்து கூட்டணி அமைத்திருப்பதால் தமிழ் திரையுலகமே ‘கோப்ரா’ படத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.உடனடி செய்திகளை தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்
Published by:Sheik Hanifah
First published: