Pandian Stores: பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகருக்கு பிறந்தநாள் - நேரில் வாழ்த்திய பிரபலங்கள்!

பாண்டியன் ஸ்டோர்ஸ்

ஸ்டாலின், சுஜிதா, ஷீலா, ஹேமா ராஜ்குமார், குமரன், மைனா நந்தினி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

  • Share this:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கும் சரவண விக்ரம் பிறந்தநாளுக்கு அவரின் வீட்டிற்கு நேரடியாக சென்று சக நடிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அண்ணன் - தம்பி பாசத்தையும், கூட்டுக் குடும்பமாக வாழும்போது ஏற்படும் நெருக்கடிகள், சண்டைகள், குழப்பங்களை பின்னணியாக வைத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. கிராமத்து பின்புலத்துடன் கூடிய கதை என்பதால் நகரம் கிராமம் அனைத்து தரப்பு பார்வையாளர்களிடமும் இந்த சீரியலுக்கு ஏகோபித்த வரவேற்பு உள்ளது. கூட்டுக் குடும்ப கதை என்றால் பெண்களும், வயது மூத்த தம்பதிகளும் விரும்பி பார்க்கும் தொடராக இருக்கும் என பலரும் கருதிய நிலையில், கதைக்களம் இளைஞர்களையும் கவரும் வகையில் விறுவிறுப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஸ்டாலின், சுஜிதா, ஷீலா, ஹேமா ராஜ்குமார், குமரன், மைனா நந்தினி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இதில் கண்ணன் கதாப்பாத்தில் சரவண விக்ரம் நடித்து வருகிறார். அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அவருக்கு, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கும் சக நடிகர் மற்றும் நடிகைகள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளனர். கண்மனி என்ற குறும்படத்தில் நடித்த அவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி சீரியல் மூலம் சின்னத்திரையில் அடியெடுத்து வைத்தார். அதில் அவரின் கதாப்பாத்திரத்துக்கு ஏற்ப முத்தாய்ப்பான நடிப்பை வெளிப்படுத்தியதால் பாண்டியன் ஸ்டோர்ஸில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியலிலும் கண்ணன் கதாப்பாத்திரத்தில் முத்திரை பதித்து வருகிறார்.

கொரோனா லாக்டவுன் காரணமாக சின்னித்திரை படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மீண்டும் படப்பிடிப்புகள் பழைய ஸ்பீடுடன் நடக்கத் தொங்கியுள்ளது. இதனால், இனிவரும் ஒவ்வொரு எபிசோட்களிலும் அதிரடி திருப்பங்களும், டிவிஸ்டுகளும் அரங்கேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், லாக்டவுனால் சீரியல் நிறுத்தப்பட்டதையடுத்து அந்த நேரத்தில் ஒளிப்பரப்பான மற்ற சீரியல்கள் மற்றும் வேறு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான சீரியல்களுக்கு ரசிகர்கள் மடைமாறி இருக்க வாய்ப்புகள் உள்ளன. அவர்களை மீண்டும் தங்கள் பக்கம் இழுக்கவும், புதிய பார்வையாளர்களுக்கு தீனி போடும் விதமாகவும் காட்சிகள் அமைக்க வேண்டிய நிலையில் சின்னத்திரை இயக்குநர்கள் உள்ளனர்.

Also read... Actress Roja: நடிகை ரோஜாவிற்கு இவ்வளவு பெரிய மகளா? ஃபேமிலி வீடியோ, ஃபோட்டோவை வைரலாக்கி வரும் ரசிகர்கள்!

நல்ல டி.ஆர்.பி ரேட்டிங்கை பெற வேண்டும் என்ற நெருக்கடியும் சின்னத்திரை இயக்குநர்களுக்கு உள்ளது. சன் டிவி, ஜீ தமிழ், விஜய் டிவி, கலர்ஸ் தமிழ் ஆகிய முன்னணி பொழுதுபோக்கு சேனல்களில் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்களும் தற்போது மீண்டும் அதே நேரத்தில் ஒளிபரப்பாக தொடங்கியுள்ளன. மக்களும் புதிய எதிர்பார்ப்புடன் சீரியல்களை பார்க்கத் தொடங்கியுள்ளனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி 2 சீரியல், மக்களின் எண்ண ஓட்டத்தை அறிந்து, தற்போது மிகப்பெரிய டிவிஸ்டுகளை காட்சிப்படுத்தி வருகின்றனர். இது நல்ல ரீச்சைக் கொடுத்துள்ளதால், இனி வரும் எபிசோடுகளிலும் அதனை தொடர உள்ளனர். இதேபோல், முன்னணி தொடராக இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கதைக்களமும் இன்னும் வேகமெடுக்கும் என கூறப்படுகிறது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: