Home /News /entertainment /

அவதூறு பேசிய பயில்வான் ரங்கநாதனை அலறவிட்ட சுசித்ரா...

அவதூறு பேசிய பயில்வான் ரங்கநாதனை அலறவிட்ட சுசித்ரா...

பாடகி சுசித்ரா விளக்கம் கேட்டு பேசும் ஆடியோ

பாடகி சுசித்ரா விளக்கம் கேட்டு பேசும் ஆடியோ

singer sucithra | தன்னை பற்றி தொடர்ந்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை யூடியூப் பக்கங்களில் பேசிவந்த பயில்வான் ரங்கநாதனை பாடகி சுசித்ரா விளக்கம் கேட்டு பேசும் ஆடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

    தமிழ் நடிகைகளின் அந்தரங்கள் என்ற பெயரில் நடிகைகள் பற்றி அவதூராக பேசிவந்த பயில்வான் ரங்கநாதனை பாடகி சுசித்ரா அலறவிட்டிருக்கிறார். எந்த நடிகைக்கு எப்படி வாப்பு கிடைத்தது. எந்த நடிகர் பாடி டிமெண்ட் உள்ளவர்.. நடிகருக்கும் நடிகைக்குமான தொடர்பு.. என்று அடுத்தவர் தனிவாழ்வு பற்றி பேசியே வைரல் ஆனவர் பயில்வான் ரங்கநாதன்.

    தூத்துக்குடியை பூர்வீகமாக கொண்டவர் 71 வயதான ரங்கநாதன். 1980 களில் இருந்து தமிழ் திரைபடங்களில் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார். மேலும் சினிமா துறைசார்ந்த செய்திகளை கொடுக்கும் பத்திரிக்கை துறையிலும் பணியாற்றிவந்துள்ளார்.

    தற்போது சினிமா வாய்ப்புகள் குறைந்த நிலையில் தன்னை அப்டேட் செய்துக்கொண்ட பயில்வான் ரங்கநாதன் தன்னை  யூடியூபராக மாற்றிக்கொண்டார். சரலமாக வாய்க்கு வந்ததை அடித்துவிடுவதில் வித்தகரான ரங்கநாதன் தமிழ் திரையுலகில் நடிகைகளை பற்றியும் அவர்களது அந்தரங்கங்கள் பற்றியும் சில யூடியூப் பக்கங்களில் பேச தொடங்கினார்.

    இப்படி பேசும் பேச்சுக்கு எப்படியும் மாட்டிக்கொள்வோம் என்று தெரிந்த ரங்கநாதன். தனக்கென தனியாக யூடியூப் பக்கம் வைத்துக்கொள்ளாமல் ரூ 5,000 முதல் 10,000 வரை பணம் பெற்றுக்கொண்டு வாய்க்கு வந்ததை அமோண்டுக்கு ஏற்றவாரு தனியார் யூடியூப் பக்கங்களில் பேசிவந்தார். அமைச்சரின் அரவணைப்பில் நடிகை, நடிகரிடம் சிக்கிய நடிகை, படத்தில் நடந்த அட்ஜஸ்ட்மென்ட் என்று ஏகத்திறக்கும் உருட்டுவது பயில்வான் ரங்கநாதனின் பாணி.

    Read More : 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை நிர்வாணப்படுத்தி வெளுத்து வாங்கிய பொதுமக்கள்


    இந்நிலையில் தான், பாடகி சுசித்ராவின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சமீபத்தில் தனியார் யூடியூப் பக்கத்தில் பேசியிருந்தார் பயில்வான் ரங்கநாதன். இதனால் ஆத்திரமடைந்த பாடகி சுசித்ரா, ரங்கநாதனை தொடர்புக்கொண்டு எதன் அடிப்படையில் என்னை பற்றி பேசியுள்ளீர்கள் என்றும் ஆதாரம் எங்கே என்று அடுத்தடுத்து கேள்விகளை வைத்துள்ளார்.

    சுசித்ராவின் தொடர் கேள்வியால் நொத்துபோன ரங்கநாதன் ஒருகட்டத்தில் படுத்தே விட்டார் என்பது போன்று மன்னிப்பு கேட்கும் அளவிற்கு சென்று இதற்கு பிராயிச்சித்தம் என்ன செய்யவேண்டும் என்ற அளவிற்கு சென்று விட்டார். என்ன பேசினாலும் விடாத பாடகி சுசித்ரா ஒருகட்டத்தில் என்ன நீங்கள் விளக்கம் கொடுப்பதாக இருந்தாலும் போலீசாரிடம் கொடுங்கள் உங்களை போன்றோரை கைது செய்ய வேண்டும் என்று முடித்துள்ளார்.

    கடந்த மாதம் தான் தயாரிப்பாளர் கே.ராஜன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இணையத்தில் பெண்கள் பற்றி அவதூரு பேசும் ரங்கநாதன் மீது நடவடிக்கை எடுக்க கூறி புகார் ஒன்றை கொடுத்திருந்தார். அடுத்ததாக தற்போது பாடகி சுசித்ராவும் புகார் கொடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். நடிகைகள் பற்றி அவதூராக பேச ஒவ்வொரு யூடியூப் சேனல் அலுவலகத்திற்கு சென்று வந்தவர் தற்போது வடிவேலு பட பஞ்சாயத்து காமெடியை போன்று ஒவ்வொரு காவல் நிலையமாக செல்லவுள்ளார்.
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Crime News

    அடுத்த செய்தி