தாமதமாகும் ’இந்தியன் 2’ ஷூட்டிங் - படத்திலிருந்து விலகும் பிரபலம்?

இந்தியன் 2

மற்றொரு பெரிய படத்திலிருந்து வாய்ப்பு வந்திருப்பதால், இந்தியன் 2 படத்தில் இருந்து விலக திட்டமிட்டிருக்கிறாராம்.

 • Share this:
  கமல்ஹாசனின் 'இந்தியன் 2' தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். இயக்குநர் ஷங்கர் இயக்கி வரும் இந்தப் படத்தில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளார் கமல் ஹாசன்.

  இந்நிலையில் படத்தின் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு 'இந்தியன் 2' படத்திலிருந்து வெளியேற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. பிஸியான ஒளிப்பதிவாளரான அவர் 'இந்தியன் 2' படப்பிடிப்பு தாமதமாவதால் அவரால் வேறு படங்களில் ஒப்பந்தமாக முடியவில்லை என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு மற்றொரு பெரிய படத்திலிருந்து வாய்ப்பு வந்திருப்பதால், இந்தியன் 2 படத்தில் இருந்து விலக திட்டமிட்டிருக்கிறாராம்.

  தளபதி 65-ல் ‘குக் வித் கோமாளி’ பிரபலம்?

  இப்போது, ரசிகர்களிடையே எழுந்துள்ள பெரிய கேள்வி என்னவென்றால், ரத்னவேலு 'இந்தியன் 2' படத்திலிருந்து வெளியேறினால், அவருக்குப் பதிலாக யார் ஒளிப்பதிவாளராக பணியாற்றுவார்கள் என்பது தான். இருப்பினும், ரத்னவேலு 'இந்தியன் 2' படத்திலிருந்து வெளியேறுவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. இரண்டு படங்களுக்கும் க்ளாஷ் ஆகாமல், தேதியை ஒதுக்கி 'இந்தியன் 2' படத்திற்காக தொடர்ந்து பணியாற்றுகிறார் என்று நம்புவோம். முன்னதாக, ’இந்தியன் 2’ படத்தில் ஒளிப்பதிவாளராக ரவி வர்மன் ஒப்பந்தமானார். படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டதால் அவர் படத்திலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: