ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

முகவரி வெளியாகி 20 ஆண்டுகளாகிவிட்டன - மறக்க முடியாத படம் - பி.சி.ஸ்ரீராம்

முகவரி வெளியாகி 20 ஆண்டுகளாகிவிட்டன - மறக்க முடியாத படம் - பி.சி.ஸ்ரீராம்

அஜித், பி.சி.ஸ்ரீராம்

அஜித், பி.சி.ஸ்ரீராம்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  அஜித்தின் முகவரி படம் குறித்து பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் ட்வீட் செய்துள்ளார்.

  இயக்குநர் வி.இசட் துரை இயக்கத்தில் அஜித், ஜோதிகா, ரகுவரன் உள்ளிட்டோரின் நடிப்பில் கடந்த 2000-ம் ஆண்டு வெளியான படம் முகவரி. இந்தப் படத்தில் இசையமைப்பாளராவதற்காக முயற்சிக்கும் இளைஞராக அஜித் நடித்திருப்பார். தேவா இசையமைத்திருந்த இந்தப் படத்துக்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்தார்.

  2000-ம் ஆண்டில் இதே தேதியில் முகவரி படம் வெளியானது. இன்றுடன் 20 ஆண்டுகளாகிவிட்டன. இந்நிலையில் படம் குறித்து ட்வீட் செய்திருக்கும் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், “இந்தப் படம் வெளியாகி 20 ஆண்டுகளாகிவிட்டன. முதல்நாளிலிருந்து இயக்குநர் வி.இசட்.துரை இயக்கத்தில், படத்தில் பணியாற்றிய அனைவரின் நடிப்பால் மறக்க முடியாத படமானது. முகவரி எப்போதும் எனக்கு பிடித்த படமானது.

  இன்றுவரை இதை சமூகவலைதளங்களில் நினைவு கூர்வதற்கு நன்றி. வாழ்த்துகள் இயக்குநர் வி.இசட்.துரை. ரகுவரன், கே.விஸ்வநாத் ஆகியோரின் நடிப்போடு அஜித் மற்றும் ஜோதிகாவின் நடிப்பு அனைவரையும் மயக்கியது” என்று கூறியுள்ளார்.

  மேலும் படிக்க: அஜித் உடல்நலம் பெற பிரார்த்தனை செய்த மாஸ்டர் பட நடிகர்!

  Published by:Sheik Hanifah
  First published:

  Tags: Actor Ajith