• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • விக்னேஷ் சிவன் படத்தில் ஒளிப்பதிவாளர் மாற்றம்.. இந்த திடீர் மாற்றத்துக்கு என்ன காரணம்?

விக்னேஷ் சிவன் படத்தில் ஒளிப்பதிவாளர் மாற்றம்.. இந்த திடீர் மாற்றத்துக்கு என்ன காரணம்?

விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவன்

காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் ஒளிப்பதிவாளர்கள் திடீரென மாறியுள்ளனர்.

  • Share this:
    காத்துவாக்குல ரெண்டு காதல் படத்துக்கு விஜய் கார்த்திக் ஒளிப்பதிவு செய்து வந்தார். இப்போது அவருக்குப் பதில் எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த திடீர் மாற்றத்துக்கு என்ன காரணம்?

    தானா சேர்ந்த கூட்டம் படத்துக்குப் பிறகு விக்னேஷ் சிவன் இயக்கும் படம், காத்துவாக்குல ரெண்டு காதல். நயன்தாரா, சமந்தா, விஜய் சேதுபதி நடிக்கும் இந்தப் படத்துக்கு விஜய் கார்த்திக் ஒளிப்பதிவு செய்து வந்தார். தற்போது அவருக்குப் பதில் எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்கிறார்



    ஒரு படத்தில் இப்படி பல ஒளிப்பதிவாளர்கள் இடம்பெறுவது ஆச்சரியமில்லை. உடல்நிலை சரியில்லை என்றாலோ, முன்பு ஒப்புக் கொண்ட படத்தின் வேலைகளை முடிக்க வேண்டியிருந்தாலோ, வேறு ஒளிப்பதிவாளரை ஒப்பந்தம் செய்வர். இப்படி கிளாஷ் வொர்க்குக்காக இப்படி ஒளிப்பதிவாளர்கள் மாறுவது சினிமாவில் வாடிக்கை. ஆனால், காத்துவாக்குல ரெண்டு காதல் விஷயத்தில் நடந்தது அது இல்லை என்கிறார்கள்.

    also read : 'தனிமையே பேரின்பம்'.. சர்ச்சையை கிளப்பிய செல்வராகவன் ட்வீட்

    விக்னேஷ் சிவனுக்கும், ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக்குக்கும் இடையே ஆரம்பம் முதலே சின்னச்சின்ன கருத்து வேறுபாடுகள் இருந்து வந்துள்ளது. ஒருகட்டத்தில், இதற்குமேல் இணைந்து பணிபுரிவது சாத்தியமில்லை என்ற நிலையில், விஜய் கார்த்திக்கை மாற்றி எஸ்.ஆர்.கதிரை ஒப்பந்தம் செய்துள்ளார் விக்னேஷ் சிவன்

    இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். சில தினங்கள் முன்பு படத்தின் ஒரு பாடல் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: