Home /News /entertainment /

விஜய்சேதுபதி ஹீரோவாக காரணம் இவரா?: உண்மையை உடைத்த சீனுராமசாமி

விஜய்சேதுபதி ஹீரோவாக காரணம் இவரா?: உண்மையை உடைத்த சீனுராமசாமி

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

நடிகர் விஜய்சேதுபதியை தன்னிடம் அறிமுகப்படுத்திய நபர் குறித்த தகவலை இயக்குநர் சீனுராமசாமி வெளியிட்டுள்ளார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    தமிழ் சினிமாவில் நாயகனாக கால்பதித்து முன்னணி நட்சத்திரமாக மாறியிருக்கும் விஜய்சேதுபதி, தனது 25-வது படமான சீதக்காதி படத்தை நடித்து முடித்துவிட்டார். அதே நேரத்தில் தனக்கான தனி ரசிகர் பட்டாளத்தையும், தனி பாதையையும் தன் படங்களின் வாயிலாக நிலைநிறுத்திவிட்டார். துணை நடிகராக பலபடங்களில் நடித்து வந்த விஜய்சேதுபதியை தென்மேற்குப் பருவக்காற்று படத்தின் மூலம் நடிகராக அறிமுகப்படுத்தினார் இயக்குநர் சீனுராமசாமி.

    இந்நிலையில் இதுகுறித்து தனது ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருக்கும் அவர், “மக்கள் செல்வன் விஜய் சேதுபதி 25 படங்கள் கடந்து செல்லும் இவ்வேளையில் அவரை தென்மேற்குப் பருவக்காற்றில் நடிக்க என்னிடம் அழைத்து வந்தவர் நடிகர் ஒளிப்பதிவாளர் திரு.அருள்தாஸ். ஒரு நல்ல நடிகரை என் தேர்வுக்கு அனுப்பிய அவரின் நட்புணர்வுக்கு நன்றி” என்று கூறியுள்ளார். விஜய்சேதுபதி 25-வது படத்தை நடித்து முடித்திருக்கும் நிலையில் அவருக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.



    See Also:
    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: Actor vijay sethupathi, Seenu ramasamy, Seethakaathi, Vijay sethupathi

    அடுத்த செய்தி