மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் மணிரத்னம்!

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் மணிரத்னம்!
இயக்குநர் மணிரத்னம்
  • News18
  • Last Updated: June 17, 2019, 12:34 PM IST
  • Share this:
உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இயக்குநர் மணிரத்னம் வீடு திரும்பியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி இயக்குநராக வலம் வரும் மணிரத்னம் செக்க சிவந்த வானம் படத்துக்குப் பிறகு பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கும் முயற்சியில் உள்ளார். இதற்கான நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வரும் நிலையில் விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் நேற்று அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதை அறிந்த அவரது ரசிகர்களும், திரையுலகினரும் நலம் விசாரித்த வண்ணம் இருந்தனர்.


இதுகுறித்து நாம் விசாரித்த போது, அவர் நரம்பியல் பிரச்னை காரணமாக, மாதம் ஒருமுறை பரிசோதனைக்காக மருத்துவரை சந்திப்பதாக கூறப்பட்டது. நேற்றும் அதேபோல் பரிசோதனைக்காக மருத்துவமனை வந்த அவர் தற்போது வீடு திரும்பியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு ஜூலை மாதமும் இயக்குநர் மணிரத்னம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. அப்போது விளக்கமளித்த அவரது செய்தித் தொடர்பாளர் நிகில் முருகன், வழக்கமான உடல் பரிசோதனைக்காக அவர் அப்போலோ மருத்துவமனைக்கு சென்றிருந்ததாக கூறினார்.

வீடியோ பார்க்க: எதிரும் புதிருமாய் வசனங்களால் சீண்டிய தல VS தளபதி!
First published: June 17, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading