யோகி பாபு - யாஷிகா காம்போவில் ‘ஜாம்பி’- மேக்கிங் வீடியோ ரிலீஸ்!

யோகி பாபு - யாஷிகா காம்போவில் ‘ஜாம்பி’- மேக்கிங் வீடியோ ரிலீஸ்!
யோகி பாபு | யாஷிகா ஆனந்த்
  • News18
  • Last Updated: September 4, 2019, 7:22 PM IST
  • Share this:
ஜாம்பி படத்தின் மேக்கிங் வீடியோ மற்றும் பாடல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

எஸ் 3 பிக்சர்ஸ் சார்பில் வசந்த் மகாலிங்கம் மற்றும் முத்துக்குமார் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் `ஜாம்பி'. யோகிபாபு, யாஷிகா ஆனந்த், கோபி, சுதாகர், டி.எம்.கார்த்திக், மனோபாலா, அன்பு தாசன், பிஜிலி ரமேஷ், ராமர், லொள்ளு சபா மனோகர், சித்ரா அக்கா உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை புவன் நல்லன் இயக்கியுள்ளார். பிரேம்ஜி இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. சமீபத்தில் இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியான நிலையில் தற்போது படம் உருவான விதத்தை வீடியோவாக வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். மேலும் இந்தப் படம் செப்டம்பர் 6-ம் தேதி திரைக்கு வர இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


மிருதன் படத்தைத் தொடர்ந்து தமிழில் வெளியாகும் ஜாம்பி வகை படமாக இந்தப் படம் உருவாகி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மேக்கிங் வீடியோ: Loading...

ஜாம்பி படத்தில் இடம்பெற்றுள்ள 'ஆர் யூ ஒகே பேபி’ பாடல் வீடியோ: 

First published: September 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...