விஜய் சேதுபதி பட உரிமையைக் கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி

தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை, இடம்பொருள் ஏவல் ஆகிய படங்களைத் தொடர்ந்து சீனு ராமசாமி - விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகியுள்ள படம் மாமனிதன்.

விஜய் சேதுபதி பட உரிமையைக் கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி
நடிகர் விஜய்சேதுபதி
  • News18
  • Last Updated: March 7, 2019, 8:00 PM IST
  • Share this:
விஜய்சேதுபதியின் மாமனிதன் பட தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை ஜீ தமிழ் டிவி கைப்பற்றியுள்ளது.

தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை, இடம்பொருள் ஏவல் ஆகிய படங்களைத் தொடர்ந்து சீனு ராமசாமி - விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகியுள்ள படம் மாமனிதன்.

இந்தப் படத்தில் காயத்ரி, லலிதா, குருசோமசுந்தரம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்துக்கு இளையராஜாவும் அவருடைய வாரிசுகளான யுவன்சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா ஆகிய மூவரும் இணைந்து இசையமைக்கின்றனர். இந்தப் படத்தை யுவன் சங்கர் ராஜாவே தயாரித்துள்ளார்.


கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14-ம் தேதி ‘மாமனிதன்’ படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கின. மின்னல் வேகத்தில் நடைபெற்ற இந்தப் படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதத்தில் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.இந்தப் படத்தில் ஆட்டோ டிரைவராக விஜய்சேதுபதி நடித்துள்ளார். படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் தொடங்கியிருக்கும் நிலையில் நடிகர் விஜய்சேதுபதி தற்போது விஜய் சந்தர் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.இந்தநிலையில் மாமனிதன் படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை ஜீ தமிழ் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

EXCLUSIVE VIDEO | கேரளா விடுதியில் துப்பாக்கியுடன் நுழையும் மாவோயிஸ்டுகள் - வீடியோ

First published: March 7, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்