Home /News /entertainment /

மீனாட்சிக்கு எதிராக அடுத்ததாக புஷ்பா செய்த சதி - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்!

மீனாட்சிக்கு எதிராக அடுத்ததாக புஷ்பா செய்த சதி - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்!

மீனாட்சி பொண்ணுங்க சீரியல்

மீனாட்சி பொண்ணுங்க சீரியல்

மீனாட்சிக்கு எதிராக அடுத்ததாக புஷ்பா செய்த சதி, கோபத்தில் வெற்றி செய்த வேலை மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இன்றைய எபிசோடில் சாமியார் கெட்டப்பில் மெஸ்க்கு வந்திருக்கும் கிரியை வெற்றி மற்றும் தடியன் கண்டுபிடிக்கின்றனர்.

    புஷ்பா திட்டம் போட்டு சங்கிலியிடம் புட் - இன்ஸ்பெக்டரை மீனாட்சி மெஸ்க்கு அனுப்ப சொல்ல இந்த பக்கம் மீனாட்சி தவறுதலாக சுடு கஞ்சியை காலில் கொட்டிக் கொள்ள அங்கிருந்த வெற்றி மீனாட்சியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்கிறான்.

    அடுத்து யமுனா மெஸ்ஸில் தனியாக இருக்கும் பொழுது அங்கு வரும் சங்கிலி அவளிடம் கலாட்டா செய்ய அப்பொழுது கார்த்திக் வர கார்த்தியுடன் யமுனா நட்புடன் பேச இதனால் கோபத்துடன் சங்கிலி அங்கிருந்து கிளம்பி செல்கிறான்.

    Also read... வெந்து தணிந்தது காடு படத்தை வெளியிட தடை கோரிய வழக்கில் சமரசம்!

    மீனாட்சி ஆஸ்பத்திரியிலிருந்து வந்து இறங்கியவுடன் புஷ்பா அனுப்பிய புட் - இன்ஸ்பெக்டர்கள் இருவர் வந்து மெஸ்ஸில் இருக்கும் உணவுகளை செக் பண்ணி, தரம் சரியில்லை என்று சொல்கின்றனர்.

    இதனால் மீனாட்சி அதிர்ச்சி அடைகிறாள். ஆனால் அவர்கள் மேல் சந்தேகம் கொள்ளும் வெற்றி அவர்களை நோக்கி கோபமாக செல்கிறான். இதனால் அடுத்து நடக்கப் போவது என்ன? புஷ்பாவின் சதி வலையில் இருந்து மீனாட்சி எப்படி மீண்டு வரப்போகிறாள்? என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv

    அடுத்த செய்தி