ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கல்லூரி விழாவுக்கு மீனாட்சியை அழைக்காமல் செல்லும் சக்தி - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்

கல்லூரி விழாவுக்கு மீனாட்சியை அழைக்காமல் செல்லும் சக்தி - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்

மீனாட்சி பொண்ணுங்க

மீனாட்சி பொண்ணுங்க

கல்லூரி விழாவுக்கு மீனாட்சியை அழைக்காமல் செல்லும் சக்தி, புஷ்பா போடும் சதி திட்டம், மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இன்றைய எபிசோடில் சக்தியோட டேபிளில் இருக்கும் லெட்டரை எடுத்து துர்கா படிக்க அதில் சக்திக்கு சிறந்த முன்னாள் மாணவர் விருது கிடைத்திருக்கும் தகவல் தெரிய வருகிறது. இதை கேட்ட மீனாட்சி பெருமைப்படுகிறாள். ஆனால் சக்தி மீனாட்சியிடம் அதைப்பற்றி சொல்லாமல் போக மீனாட்சி வருத்தப்படுகிறாள்.

அடுத்த நாள் காலை சக்தி அழைத்து போவாள் என மீனாட்சி தயாராக இருக்க சக்தி கூப்பிடாமல் போக மீனாட்சி ஆதங்கம் தாங்க முடியாமல் அழுதுவிட யமுனா ஆறுதல் சொல்கிறாள். கல்லூரியில் வெற்றிக்கு சக்தி தன் தோழியை அறிமுகப்படுத்த அப்போது அங்கு வெற்றியின் அத்தை மகள் பூஜா வருகிறாள். அவளை பார்க்காமல் உள்ளே போகும் வெற்றி சக்தியிடம் இவ்வளவு பெரிய விருது வாங்கறீங்க அம்மாவ கூப்பிடலாயா என கேட்க சக்தி ஃபீல் பண்ணி அம்மாவுக்கு போன் செய்ய ரிங் போகவில்லை.. வெற்றியும் சக்தியும் ஆடிட்டோரியத்திற்கு செல்ல பூஜா வெற்றியை பார்த்து விடுகிறாள்.

Also read... நயன் - விக்கி தம்பதிக்கு இரட்டைக் குழந்தை பிறந்த மருத்துவமனை சுகாதாரத்துறையால் கண்டுபிடிப்பு!

அவள் போன் செய்ய வெற்றி அவாய்ட் பண்ண புஷ்பா குடும்பத்துடன் கல்லூரிக்கு வர அங்கு சக்தியின் பேனரை பார்த்து டென்ஷன் ஆகிறாள். மீனாட்சி சக்தி கூப்பிடலனாலும் பரவாயில்லை வாங்க போலாம்னு மெஸ்ஸை மூடிவிட்டு புறப்பட புஷ்பா கல்லூரி செக்யூரிட்டியிடம் ஐயாயிரம் பணம் கொடுத்து மீனாட்சி போட்டோவை காட்டி இவ உள்ள வந்தா விடாதே என கூறுகிறாள்.

இதனால் அடுத்து நடக்கப் போவது என்ன? ஷக்தி புஷ்பாவின் திட்டத்தை முறியடிப்பாளா என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv