முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / யமுனாவுடன் வீட்டுக்கு வந்த கார்த்திக் - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்

யமுனாவுடன் வீட்டுக்கு வந்த கார்த்திக் - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்

மீனாட்சி பொண்ணுங்க

மீனாட்சி பொண்ணுங்க

யமுனாவுடன் வீட்டுக்கு வந்த கார்த்திக், கோகிலா கொடுத்த அதிர்ச்சி என மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் திருமணமான விஷயத்தை அம்மாவுக்கு எப்படி சொல்வது என மன வருத்தத்தில் இருக்கும் யமுனாவுக்கு சாந்தா ஆறுதல் சொல்கிறாள். மறுபக்கம் நீதிமணி பீரோவில் இருக்கும் மீனாட்சியின் பரம்பரை செயினை எடுக்க அப்போது அங்கே வந்த சங்கிலியும், புஷ்பாவும் நீதிமணியிடம் வாக்குவாதம் செய்கின்றனர்.

இது மீனாட்சி பரம்பரை செயின் என்று நீதிமணி சொல்ல சங்கிலி நீதி மணியை மரியாதை குறைவாக பேச, நீதிமணி கோவத்தில் சங்கிலியை அடித்து அவன் நெஞ்சில் கால்வைத்து மிதித்து அவனை எச்சரித்து விட்டு செல்கிறான் நீதிமணி.

பிறகு அந்த செயினுடன் மீனாட்சி வீட்டிற்கு வரும் நீதிமணி நடந்த சம்பவங்களுக்கு மன்னிப்பு கேட்டு அந்த சங்கிலியை யமுனாவின் வரதட்சணை செலவுக்கு வைத்துக் கொள்ளுங்கள் என்று கொடுத்துவிட்டு வருகிறான். வெற்றி சக்தியிடம் முத்தம் கேட்க அவள் கொடுக்க மறுக்கிறாள். வெற்றி கட்டிலில் படுத்துக் கொள்ளவா கைவலிக்கிறது என்று சொல்ல சக்தி வெற்றியை கட்டிலில் படுக்க சொல்கிறாள்.

அடுத்து மருத்துவமனையில் இருந்து வந்த கோகிலாவும் கனகலிங்கமும் வீட்டில் இருக்க கார்த்திக் யமுனாவை கழுத்தில் தாலியுடன் கூட்டிக்கொண்டு வர அதை பார்த்து கோகிலா அதிர்ச்சி அடைகிறாள். இவள் என் மனைவி என்று கார்த்திக் சொல்ல கோகிலா இவள் வீட்டில் இருக்கக் கூடாது என்று யமுனாவின் கையை பிடித்து வெளியே இழுத்து செல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv