முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / கார்த்திக், யமுனாவுக்கு திருமணத்தில் வெற்றி எடுத்த அதிரடி முடிவு - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்

கார்த்திக், யமுனாவுக்கு திருமணத்தில் வெற்றி எடுத்த அதிரடி முடிவு - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்

மீனாட்சி பொண்ணுங்க சீரியல்

மீனாட்சி பொண்ணுங்க சீரியல்

கார்த்திக், யமுனாவுக்கு ரகசிய கல்யாணம் குறித்து வெற்றி எடுத்த முடிவு என மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கார்த்திக்கு அவனது அம்மா வேறொரு பெண்ணை பார்ப்பதால் மனம் நொந்து போன யமுனா தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து கிணற்றில் விழித்தது போல சக்தி கனவு கண்டு எழுந்து அழுது பயப்படுகிறாள்.

அடுத்து வெற்றி மீனாட்சி வீட்டின் கல்கோயில் முன் அமர்ந்திருக்க வெற்றியின் மீது மரத்தில் இருந்து தாலி ஒன்று விழுகிறது. இதனால் வெற்றி யமுனாவுக்கு கல்யணம் செய்து வைத்து விடலாம் என்ற திட்டத்தை நண்பர்களிடம் சொல்கிறான்.

மறுநாள் காலையில் கல்யாணம் செய்து வைக்கும் திட்டத்துடன் வெற்றி நண்பர்களுடன் கிளம்ப, சக்தி வந்து விடுகிறாள். என்ன எங்காவது பிரச்சனை செய்ய கிளம்பிட்டீகளா? என கேட்க, ஒரு நல்ல காரியத்துக்கு செல்கிறோம் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார்கள்.

அடுத்து வெற்றியும் அவனது நண்பர்களும் சாந்தாவை சந்தித்து யமுனாவுக்கு நல்லது செய்வது போல் பேசி மீனாட்சிக்கு தெரியாமல் கல்யாணம் செய்து வைக்க, யமுனாவை கோவிலுக்கு அழைத்து வர சொல்கிறார்கள்.

இந்த பக்கம் கார்த்தி கோகிலாவிடம் ஏன் எனக்கு வேறு இடத்தில் பெண் பார்க்க சென்றீர்கள் என்று கேட்க, அங்கே வந்த வெற்றி, அம்மா உங்க நல்லதுக்குதான் செய்வார்கள் என்று கோகிலாவுக்கு சாதகமாக பேசுகிறான்.

பின்பு வெற்றி கார்த்திக்கிடம் யமுனாவிற்கு வேறு ஒருவருடன் கல்யாணம் நடக்கப்போகிறது என்று பொய் சொல்லி கார்த்திக்கை தன்னுடன் ஜீப்பில் அழைத்துச் செல்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப் போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv