Home /News /entertainment /

புஷ்பாவை பார்க்க போன மீனாட்சி.. பணத்தை கொள்ளை அடித்த மர்ம நபர் - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்!

புஷ்பாவை பார்க்க போன மீனாட்சி.. பணத்தை கொள்ளை அடித்த மர்ம நபர் - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்!

மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்

மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்

இன்றைய எபிசோடில் யமுனாவை அழைத்துக் கொண்டு புஷ்பா வீட்டிற்கு பணத்தை கொடுக்க மீனாட்சிக்கு செல்ல வழியில் எதிர்பாராத விதமாக சக்தி இவர்களை பார்த்துவிட அதிர்ச்சியான மீனாட்சியை ஒரு வழியாக கடைக்கு போவதாக சொல்லி சமாளித்துவிட்டு அங்கிருந்து நகர்கிறாள்.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    புஷ்பாவை பார்க்க போன மீனாட்சி, பணத்தை கொள்ளை அடித்த மர்ம நபர், அடுத்து நடக்கப் போவது என்ன மீனாட்சி பொண்ணுங்க சீரியல் இன்றைய எபிசோடு அப்டேட்.

    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. மீனாட்சி கையில் பணம் மற்றும் பத்திரத்தை வைத்துக்கொண்டு சாமி முன்னாடி உட்கார்ந்து அழுது புலம்ப யமுனா கேட்க மற்ற உண்மைகளையும் கூறினாள் மீனாட்சி.

    இன்றைய எபிசோடில் யமுனாவை அழைத்துக் கொண்டு புஷ்பா வீட்டிற்கு பணத்தை கொடுக்க மீனாட்சிக்கு செல்ல வழியில் எதிர்பாராத விதமாக சக்தி இவர்களை பார்த்துவிட அதிர்ச்சியான மீனாட்சியை ஒரு வழியாக கடைக்கு போவதாக சொல்லி சமாளித்துவிட்டு அங்கிருந்து நகர்கிறாள்.

    புஷ்பா வீட்டுக்கு போனதும் அங்கு பத்திரத்தை வாங்கி பார்த்த நீதிமணி கையெழுத்து இல்லாததால் அதிர்ச்சியடைந்து நீ கையெழுத்து போடு பணத்தையும் வச்சுக்கோ பொண்ணுங்க கல்யாணத்தை நாம் முன்னாடி நின்னு நடத்த வேண்டும் என சொல்லி மீண்டும் பத்திரத்தை மீனாட்சியிடம் கொடுத்து விடுகிறான்.

    Also read... வித்யாவை கொல்ல நடக்கும் சதி - வித்யா நம்பர் 1 சீரியல் அப்டேட்!

    இதனால் என்ன செய்வது என தெரியாமல் கையில் பணத்துடன் ரோட்டில் நடந்து வர எவனோ ஒருவன் பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு செல்ல அவனை மடக்கி பிடிக்க ஓடி கீழே விழுகிறாள் மீனாட்சி. இன்னொரு பக்கம் சக்தி அசோக்கை சந்தித்து பேச வாங்கி வந்த வெற்றி சக்தியை பார்த்து பீல் செய்கிறான்.

    மீனாட்சியிடம் இருந்து பணத்தை திருடியது யார்? விஷயம் சக்திக்கு தெரிந்தால் என்ன நடக்கும்? அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பது இனி வரும் எபிசோடுகளில் தெரியவரும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv

    அடுத்த செய்தி