ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சங்கர பாண்டி செய்த சூழ்ச்சியால் சூர்யா எடுத்த முடிவு - மாரி சீரியல் அப்டேட்!

சங்கர பாண்டி செய்த சூழ்ச்சியால் சூர்யா எடுத்த முடிவு - மாரி சீரியல் அப்டேட்!

மாரி சீரியல்

மாரி சீரியல்

சங்கர பாண்டி செய்த சூழ்ச்சியால் சூர்யா எடுத்த முடிவு, மாரி சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

 • News18
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மாரி. இன்றைய எபிசோடில் தாராவின் உடல் முழுக்க விஷம் ஏறி நீல கலராக மாற மாரி அம்மனிடம் வேண்டிய மஞ்சளை நெற்றியில் வைத்து அருகில் உள்ள சாமியை கும்பிட்டு வெத்தலையை சூடு பண்ணி தாராவின் நெத்தியில் வைத்து கட்டுகிறாள்.

  பிறகு கொஞ்ச நேரத்தில் தாராவின் முகம் நீலக் கலரில் இருந்து நார்மலாக மாறி தாராவிற்கு அசைவு ஏற்பட டாக்டர் உட்பட அனைவரும் ஆச்சரியம் அடைகின்றனர். உடனே டாக்டர் அனைவரையும் வெளியே போக சொல்ல சங்கர பாண்டி விஷத்தை நீயே வைத்து விட்டு எங்க அக்காவை காப்பாத்துற மாதிரி நாடகமாடுறியா என்று மாரி மீது பழி போட சூரியா மாரியை ஹாஸ்பிடலை விட்டு வெளியே போக சொல்கிறான்.

  பிறகு மாரி தாரா அம்மா கண் முழிச்சதுக்கு அப்புறம் நான் போறேன் என்று சொல்ல, முடியாது வெளிய போ என்று மீண்டும் சூர்யா சொல்ல மாரி சோகமாக வீட்டிற்கு வந்து அம்மனிடம் வேண்ட கிளி சிவா வந்து தாரா அம்மா உயிர் பிழைச்சிட்டு இருக்காங்க என்ற விஷயத்தை சொல்கிறது.

  உடனே ஹாசினிக்கு சந்தோஷம். அடுத்து ஹாஸ்பிடலில் தாராவிடம் மாரி வந்து தலையில் வெத்தலை வைத்த விஷயத்தை தெரியப்படுத்த மாரியால் தான் உயிர் பிழைக்கவில்லை என் மகன் சூர்யாவின் பாசம் தான் என்னை வந்து காப்பாற்றியது என்று பெருமையாக சொல்கிறாள்.

  பிறகு தாராவை வீட்டுக்கு அழைத்து வர சூர்யா வெளியே சென்றபின் மாரி வீட்டுக்குள் வர அரவிந்த் ஏன் வீட்டுக்குள் வந்தாய் என்று திட்ட அப்போது மாரிக்கு சூப்பர் பவர் ஏற்பட்டு விஷப்பாட்டில் அந்த வீட்டில் உருண்டு வரும் காட்சி வர அதனை அனைவருக்கும் சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.

  Also read... பொன்விழா காணும் வசந்த மாளிகையின் தமிழக, இலங்கை சாதனைகள்

  அடுத்து என்ன நடக்க போகிறது? தாரா எப்படி சிக்க போகிறாள்? என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: TV Serial, Zee Tamil Tv