Home /News /entertainment /

மாரியை பார்க்க போய் மயங்கி விழுந்த ஹாசினி... மாரி சீரியல் அப்டேட்!

மாரியை பார்க்க போய் மயங்கி விழுந்த ஹாசினி... மாரி சீரியல் அப்டேட்!

மாரி சீரியல்

மாரி சீரியல்

மாரியை பார்க்க போய் மயங்கி விழுந்த ஹாசினி, காரணம் என்ன என்பது மாரி சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்டில் தெரியவரும்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மாரி. இன்றைய எபிசோடில் மாரி தங்கி இருக்கும் கெஸ்ட் ஹவுஸ்க்கு ஹாசினி வருகிறாள். பிறகு அவள் மாரியை பாட சொல்ல மாரி நான் பாடினால் ஹஸ்பன்ட் சாருக்கு பிடிக்காது. அதனால் நான் பாட மாட்டேன் என்று சொல்ல ஹாசினி கண்டிப்பாக நீ பாடி தான் வேண்டும் என்று சொல்ல அதை சமாளிக்க மாரி அம்மன் பிரசாதம் என்று ஹாசினிக்கு வாழைப்பழத்தை கொடுக்கிறார்.

    மாரி கொடுத்த வாழைப்பழத்தை சாப்பிட்டு ஹாசினி மயங்கி விழ அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். பிறகு டாக்டர் செக் பண்ணி பார்க்க ஹாசினி கர்ப்பம் என்று சொல்ல அனைவரும் சந்தோஷம் அடைகின்றனர்.  மாரி வந்த ராசி தான் ஹாசினி கர்ப்பம் தரிக்க காரணம் என்று மாரியை பெருமையாக பேச ஹாசினி மாரிக்கு நன்றி சொல்கிறாள்.

    இதை பார்த்த ஜெகதீஷ் நேராக சூரியாவிடம் சென்று பார் மருமகள் மாரி வந்த நேரம் எல்லாமே நல்ல விஷயமாக நடக்கிறது அவளை அவுட் ஹவுஸில் தங்க வைத்தது சரியாக இருக்காது.

    Also read... சங்கிலியை பார்த்து பயந்து நடுங்கும் மீனாட்சி... சக்திக்கு தெரிய வந்ததா உண்மை? - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்

    தயவு செய்து நீ வீட்டுக்குள் அழைத்து வா என்று சொல்ல சூர்யா முடியவே முடியாது நான் கண்டிப்பா அழைத்து வர மாட்டேன் என்று சொல்கிறான். அடுத்ததாக ஹாசினி சந்தோசமாக கேக் எடுத்துக் கொண்டு மாரியை பார்க்க சென்று அவளிடம் கொடுத்து சாப்பிட சொல்ல அதை தாரா தடுத்து நிறுத்த ஹாசினி அதிர்ச்சியடைகிறாள். அடுத்து நடக்கப் போவது என்ன? சூர்யா மனம் மாறி மாரியை வீட்டுக்கு அழைப்பானா? என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv

    அடுத்த செய்தி