முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / குலதெய்வத்தை கண்டுபிடிக்க முயற்சிக்கும் மாரி - மாரி சீரியல் அப்டேட்!

குலதெய்வத்தை கண்டுபிடிக்க முயற்சிக்கும் மாரி - மாரி சீரியல் அப்டேட்!

மாரி சீரியல்

மாரி சீரியல்

குலதெய்வத்தை கண்டுபிடிக்க முயற்சிக்கும் மாரி, தாரா செய்த சதி என மாரி சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மாரி.  இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் குலதெய்வத்தை கண்டுபிடிக்க மாரி கருப்பசாமியிடம் சென்று வேண்டுகிறாள். அப்போது அங்கு இருக்கும் பூசாரி அவ்வளவு சீக்கிரம் கருப்பன் இறங்கி வர மாட்டான், அதற்கு முதலில் சில பூஜைகளை செய்ய வேண்டும் என சொல்கிறார்.

அதாவது மண்குதிரை மாரி மற்றும் சூரியா பெயரில் அருவா உள்ளிட்டவற்றை வாங்கி வர வேண்டும். அதோடு, ஒரு நாள் முழுவதும் விளக்கு அணையாமல் பூஜை செய்து அந்த விளக்கை எடுத்து வர வேண்டும் என சொல்கிறார். இதையெல்லாம் ஒளிந்து இருந்து கேட்கும் தாரா தரப்பில் இந்த பூஜையை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என திட்டமிடுகிறது.

அடுத்து மாரி பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்க தாரா சூர்யாவிடம் நாளைக்கு ஹாஸ்பிடல் போகணும் நீ என்னோட கண்டிப்பா வரணும் என சொல்ல சூர்யாவும் வருவதாக வாக்கு கொடுக்கிறான்.

ஆனால் வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் சூர்யாவையும் மாரியுடன் சேர்ந்து பூஜை செய்யுமாறு சொல்ல அவன் ரூமுக்கு வந்து மாரியிடம் தனக்கு அம்மாவின் உயிர்தான் முக்கியம் ஆகையால் நான் பூஜை செய்ய முடியாது என சொல்ல மாரியும் சரி ஹஸ்பண்ட் சார் என சொல்கிறாள்.

இதனை அடுத்து சூர்யா தூங்கிக் கொண்டிருக்கும் போது அவனது கனவில் வரும் கருப்பசாமி எனக்கு உன்னால் பூஜை செய்ய முடியாதா என சாட்டையடி கொடுக்க பயந்து போகும் சூர்யா பூஜை செய்வதாக முடிவெடுக்கிறான்.  இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv