முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / கட்டுப்படடுத்தப்பட்ட தேவி, மாரிக்கு காத்திருந்த அதிர்ச்சி - மாரி சீரியல் அப்டேட்

கட்டுப்படடுத்தப்பட்ட தேவி, மாரிக்கு காத்திருந்த அதிர்ச்சி - மாரி சீரியல் அப்டேட்

மாரி சீரியல்

மாரி சீரியல்

கட்டுப்படடுத்தப்பட்ட தேவி, மாரிக்கு காத்திருந்த அதிர்ச்சி என மாரி சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மாரி.  இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் தாரா, சங்கரபாண்டியும், ஜாஸ்மின் என மூவரும் சேர்ந்து மந்திரவாதி கொடுத்த முட்டை மற்றும் மற்றும் எலுமிச்சை பழத்தை இரவு எல்லோரும் தூங்கிய பிறகு வீட்டின் நான்கு பக்கமும் புதைத்து விடுகின்றனர். மறுநாள் காலையில் ஹாசினி தேவி அம்மா போட்டோ முன்பு விளக்கேற்ற விளக்கு எறியாமல் போகிறது. வீட்டில் உள்ள ஒவ்வொருத்தரும் விளக்கேறியும் எறியாததால் வீட்டில் ஏதோ பிரச்சினை இருக்கிறது என தெரிய வருகிறது.

உடனே மாரி குருஜியை சென்று சந்திக்க அவர் தேவியம்மா வீட்டுக்குள் வர முடியாமல் இருக்கிறார், உன்னுடைய குல தெய்வத்தை போய் கும்பிடு என சொல்லி அனுப்ப மாரி வீட்டில் குல தெய்வம் குறித்து கேட்க யாருக்கும் தெரியாமல் இருக்கிறது. தேவி குல தெய்வத்தை தேடி போன போது தான் அவளை கொன்னேன், இப்போ மாரி குல தெய்வத்தை தேடி போக போறாளா? என தாரா டென்ஷன் ஆகிறாள். அடுத்து ஜாஸ்மின் மற்றும் ஶ்ரீஜா மந்திரவாதியை சென்று சந்தித்து இந்த விஷயத்தை சொல்கின்றனர்.

குல தெய்வத்தை வழிபட்டால் தேவியின் பலம் அதிகமாகி விடும், அதன்பிறகு எதுவும் செய்ய முடியாது, உடனே இதை தடுத்து நிறுத்துங்க என சொல்ல இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர். அடுத்து மாரி கோவிலில் குல தெய்வத்தை நினைத்து வேண்ட 8 வயது பெண்ணுக்கு சாமி வந்து கருப்பு சாமியை சென்று சந்திக்க சொல்கிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Also read... முதல் படத்திலேயே முத்தக்காட்சிகளில் நடிக்க இதுதான் காரணம் - ஓபனாக பேசிய அனிகா சுரேந்திரன்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv