ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது புத்தம் புதிய சீரியல் கனா. இந்த சீரியலில் நாயகனாக விஷ்ணு விஷ்வா என்ற கதாபாத்திரத்தில் நடிக்க தர்ஷனா நாயகியாக அன்பரசி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
நாயகியான அன்பரசி தடகளத்துறையில் ஜெயிக்க வேண்டும் என்ற ஆசையோடு இருக்க அவளது அம்மா கஸ்தூரி கட்டாய திருமணம் செய்து வைக்க முயற்சி செய்து வருகிறாள். ஏற்கனவே நான்கு முறை மணமேடை வரை வந்து அன்பரசி தப்பி செல்ல இந்த முறை காலை கட்டி கொண்டு வந்திருந்த நிலையில் அன்பரசி தனது மாமாவின் உதவியுடன் மண்டபத்தில் இருந்து தப்பித்து ஊரில் நடக்கும் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்ள ஓடினாள்.
இந்த போட்டியில் தன்னை ஏளனமாக பேசிய அனன்யாவை தோற்கடித்து கப்பை ஜெயித்து கரியை பூசினாள் அன்பரசி. இதனால் அனன்யாவுக்கு அன்பரசி பகையாளியாக மாற மறுபக்கம் அவளது அம்மா கல்யாணம் செய்து வைக்க முயற்சிக்கிறாள். இப்படியான நிலையில் மாமாவின் உதவியால் அன்பரசி சென்னை செல்ல அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
சென்னை வந்தடையும் அன்பரசி தங்க இடம் இல்லாமல் ப்ளாட்பார்மில் படுத்து கிடக்க அந்த வழியாக வரும் ஜானகி பாட்டி அன்பரசியை தனது வீட்டுக்கு அழைத்து செல்கிறாள். தனது சொந்த பாட்டி என தெரியாமல் அன்பரசி அந்த வீட்டுக்கு செல்கிறாள். அப்பா சந்திரசேகரை பார்த்ததும் அன்பரசிக்குள் ஏதோ ஒரு இனம் புரியாத பாசம் வருகிறது. ஆனால் அதற்கான காரணம் தெரியாமல் தவிக்கிறாள்.
இன்னொரு பக்கம் அன்பரசி ஒவ்வொரு முறையும் விஷ்வாவை பார்க்கும் போதெல்லாம் அவன் தப்பானவானாக தெரிய கடைசியில் அவன் தான் தன்னுடைய கோச் என தெரிய வருகிறது. இதனால் அன்பரசி அவனிடம் மன்னிப்பு கேட்க அடுத்து விஷ்வா அவளுக்கு நன்றக பயிற்சி கொடுக்க அது அனன்யாவுக்கு பிடிக்காமல் போகிறது.
Also read... நடிகர் சூரி அளித்த பண மோசடி புகார் - விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!
இந்த பக்கம் அன்பரசியின் மாமா கஸ்தூரியிடம் அவளுக்கு சென்னையில் காலேஜில் ஷீட் கிடைத்த விஷயத்தை சொல்ல கஸ்தூரி மகளை பார்க்க சென்னைக்கு கிளம்ப அப்போது கடன்காரர்கள் கஸ்தூரி வாங்கிய கடனுக்காக வீட்டை ஜப்தி செய்ய நடுரோட்டுக்கு வருகின்றனர். கூலி வேலை செய்ய தொடங்க இந்த நேரத்தில் அப்பா அம்மாவை பார்க்க அன்பரசி ஊருக்கு வர குடும்பத்தின் நிலைமையை கண்டு அதிர்ச்சி அடைகிறாள்.
இதனால் அவள் அடுத்து என்ன செய்ய போகிறாள்? குடும்பமா? கனவா? என்ற சூழ்நிலையில் அன்பரசி எடுக்க போகும் முடிவு என்ன என்ற கோணத்தில் சீரியல் கதைக்களம் நகர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: TV Serial, TV Serial Promos