ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

அமுதாவுக்கு தெரியவரும் உண்மை.. செந்திலை அடித்து வெளுக்கும் சிதம்பரம் - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்

அமுதாவுக்கு தெரியவரும் உண்மை.. செந்திலை அடித்து வெளுக்கும் சிதம்பரம் - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்

அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல்

அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல்

அமுதாவுக்கு தெரியவரும் உண்மை, செந்திலை அடித்து வெளுக்கும் சிதம்பரம், அடுத்து அமுதா எடுக்க போகும் முடிவு என்ன பரபர திருப்பங்களுடன் அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

 • News18
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும்‌. ஸ்கூலில் பியூனாக வேலை பார்த்து வரும் செந்தில் தனது அம்மாவின் ஆசைக்காக அவளிடம் நான் வாத்தியார் என பொய் சொல்லி வரும் நிலையில் அதே பொய்யை வைத்து அமுதாவையும் திருமணம் செய்ய உள்ளார்.

  அமுதா தான் ஒரு வாத்தியாரை திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் என ஆசை ஆசையாக இருக்க திருமண ஏற்பாடுகளும் பரபரப்பாக நடந்து வருகின்றன. நாகு ஒரு பக்கம் செந்திலை மிரட்ட வாத்தியார் மறுபக்கம் பணம் கேட்டு மிரட்டு வருகிறார். இதனால் அடுத்து என்ன நடக்கும் செந்தில் குறித்த உண்மை தெரிய வந்தால் கல்யாணம் நடக்குமா நடக்காதா? என பல கேள்விகளுடன் இந்த சீரியல் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை கூட்டி வருகிறது.

  இப்படியான நிலையில் தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோ வீடியோவில் நாகு செந்திலை நீ வாத்தியார் தான் என உங்க அம்மா மீது சத்தியம் பண்ணி சொல்லு என கேட்க செந்தில் நான் வாத்தியார் இல்லை என்ற உண்மையை உடைக்க தனலட்சுமி மயங்கி விழுகிறாள். இன்னொரு பக்கம் அமுதா கதறி அழ சிதம்பரம் பெல்டை எடுத்து செந்திலை அடித்து விளாசுகிறார்.

  Also read... மேடையில் ஒய்யாரமாக பஹத் -நஸ்ரியா ஜோடி! லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

  இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன? செந்தில் வாத்தியார் இல்லை என தெரியவந்த நிலையில் அமுதா அடுத்ததாக என்ன முடிவு எடுக்கப் போகிறாள் என்ற பரபரப்பான கதைக்களத்துடன் அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் ஒளிபரப்பாக இருப்பது தெரியவந்துள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: TV Serial, Zee Tamil Tv