முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / தம்பி திருமணத்தில் அமுதாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்

தம்பி திருமணத்தில் அமுதாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்

அமுதாவும் அன்னலட்சுமியும்

அமுதாவும் அன்னலட்சுமியும்

புவனாவை கடத்திய ரவுடிகள், தம்பியின் திருமணத்தில் அமுதாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி என அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் செந்திலின் வீட்டில் புவனா மட்டும் தனியா இருக்க அப்போது அங்கு வரும் நான்கு ரவுடிகள் புவனாவை கடத்த முயற்சி செய்ய கதவை சாத்திய புவனா செந்திலுக்கு தகவல் கொடுக்க செந்தில் அமுதாவுடன் விரைந்து வருகிறான். அதற்குள் இந்த பக்கம் ரவுடிகள் கதவை உடைத்து புவனாவை தூக்கிச் செல்கின்றனர்.

செந்திலிடம் அமுதா நம்ம போறதுக்குள்ள என்ன நடக்கும்னு தெரியலையே என சொல்ல, செந்தில் யோசிக்கிறான். அதற்குள் ரவுடிகள் ஒரு கோவிலுக்கு புவனாவை கொண்டு வருகின்றனர். அங்கு கல்யாண ஏற்பாட்டுக்கான வேலைகள் நடந்திருக்கிறது. திடீரென புவி(வித்யா நம்பர் 1) அங்கு வந்து அவர்களை அடித்து வெளுக்கிறான்‌. யாருடா கடத்த சொன்னா என அடித்து கேட்க அவர்கள் எதுவும் சொல்லாமல் மௌனம் காக்கின்றனர். ஆர்யன் செந்திலுக்கு போன் செய்ய, அமுதாவும் செந்திலும் வருகின்றனர்.

வெற்றி ரௌடிகளை அடித்து கேட்டுக் கொண்டிருக்க அமுதாவின் தம்பி கல்யாண கோலத்துடன் அங்கு வருகிறான். அமுதா தம்பியை திட்டுகிறாள்‌‌. நீ இப்படி பண்ணுவேன்னு நான் எதிர்பார்க்கலை என சொல்லி அனைவரும் அங்கிருந்து சிதம்பரம் வீட்டிற்கு கிளம்புகின்றனர்.

புவி காரில் சிதம்பரம் வீட்டில் வந்து இறங்க வெற்றி செந்தில், அமுதாவிடம் புவனா இனிமே எங்க இருந்தாலும் வம்பு தான், புவனாவும் இங்கயே இருக்கட்டும் என சொல்லிவிட்டு செல்கிறான். அமுதா, தம்பி, புவனா, செந்தில் பேசிக் கொண்டிருக்க உமா, நாகு இதை பார்க்கிறார்கள். நாகு வீடியோ எடுக்க உமா இதைப் பார்த்து டென்ஷன் ஆகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப் போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv