Home /News /entertainment /

செந்தில் குடும்பத்தை அசிங்கப்படுத்திய நாகு - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்

செந்தில் குடும்பத்தை அசிங்கப்படுத்திய நாகு - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்

அமுதாவும் அன்னலட்சுமியும்

அமுதாவும் அன்னலட்சுமியும்

அன்னலட்சுமி தன்னுடைய தம்பியுடன் வந்து பத்திரிக்கை வைக்க அப்போது நாகு இருவரையும் அசிங்கப்படுத்தி பேசுகிறாள். இதனால் இருவரும் மனம் நொந்து வெளியே செல்கின்றனர்.

  • News18
  • Last Updated :
    செந்தில் குடும்பத்தை அசிங்கப்படுத்திய நாகு, நடந்தது என்ன அமுதாவும் அன்னலட்சுமியும் எபிசோட் அப்டேட்.

    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் புத்தம் புதிய சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இந்த சீரியலில் சிதம்பரம் வடிவேலு பணத்தை திருடியதாக நினைத்து குமரேசனுடன் அன்னலட்சுமி வீட்டுக்கு சென்று இது பற்றி கேட்க வடிவேலு தன்னுடைய அப்பாவின் போட்டோவின் மீது சத்தியம் செய்து பணத்தை எடுக்கவில்லை என கூறினான்‌. இதனால் அன்னலட்சுமி வடிவேலு பணத்தை எடுத்து இருக்க மாட்டான் என சொன்னாள். தன் மீது திருட்டு பழி சுமத்தியதால் வடிவேலு இந்த திருமணம் வேண்டாம் என கூறுகிறான்.

    ஆனால் அன்னலட்சுமி என்னால் எப்படி உன்னை விட்டுக் கொடுக்க முடியாதோ அதே மாதிரி அமுதாவையும் விட்டுத்தர முடியாது அவளும் இந்த வீட்டு பொண்ணு தான் என கூறுகிறாள். இதனால் கோபமான வடிவேலு வீட்டை விட்டு கிளம்புகிறான்.

    இந்தப் பக்கம் அமுதாவின் வீட்டில் அனைவரும் அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது நாகு வடிவேலு என்னைக்கும் திருந்த மாட்டான் இப்படி ஒரு குடும்பத்திலயா நம்ம வீட்டு பொண்ண கொடுக்கணும்? என் தம்பியும் ஒரு காலத்துல குடிச்சிட்டு திரிஞ்சுகிட்டு இருந்தவன் தான் ஆனா இன்னைக்கு திருந்தி ஒரு வேலையில இருக்கான் என கூறுகிறாள். இதனால் அமுதாவுக்கு நாகுவின் தம்பி மீது சந்தேகம் வருகிறது.

    Also read... நடிகர்கள் சம்பளம், ஓ.டி.டி வெளியீடு குறித்து திரையரங்கு உரிமையாளர் சங்கத்தினர் ஆலோசனை

    அதன் பிறகு செந்திலுக்கு போன் போட்டு வடிவேல் பற்றி விசாரிக்க என் தம்பி கெட்டவன் தான் ஆனா அப்பா மீது சத்தியம் வைத்து சொல்கிறான். அதனால் அவன் பணத்தை எடுத்து இருக்க மாட்டான் என கூறுகிறான். இதனால் நாகுவின் தம்பி மீது அமுதாவுக்கு இன்னும் சந்தேகம் வலுக்கிறது.

    இப்படியான நிலையில் அன்னலட்சுமி தன்னுடைய தம்பியுடன் வந்து பத்திரிக்கை வைக்க அப்போது நாகு இருவரையும் அசிங்கப்படுத்தி பேசுகிறாள். இதனால் இருவரும் மனம் நொந்து வெளியே செல்கின்றனர். இதனால் அமுதா என்ன செய்யப் போகிறாள்? சிதம்பரம் எடுக்கப் போகும் முடிவு என்ன? என்பது வரும் எபிசோடுகளில் தெரியவரும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: TV Serial Promos, Zee tamil

    அடுத்த செய்தி