Home /News /entertainment /

தொடங்கப்படும் முன்பே விலை பேசப்படும் விஜய் படம்

தொடங்கப்படும் முன்பே விலை பேசப்படும் விஜய் படம்

விஜய்

விஜய்

இந்தப் படத்தின் அனைத்து மொழிகளுக்குமான திரையரங்கு, சேட்டிலைட், டிஜிட்டல் உரிமைகளை வாங்க ஸீ நெட்வொர்க் பேச்சுவார்த்தையை ஆரம்பித்திருக்கிறது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
முன்னணி நடிகர்களின் படங்களை வெளியிட போட்டா போட்டி நடக்கிறது. ஓடிடிகள் அதிக பணம் தர முன் வருகின்றன. திரையரங்குகளும் எந்நேரமும் படத்தை வெளியிட தயாராக உள்ளன. படம் அண்டர்புரொடக்ஷனில் இருக்கையில் வியாபாரம் பேசியவர்கள் இப்போது பட அறிவிப்பு வந்ததுமே பிசினஸ் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.

விஜய்யின் 65 வது படமான பீஸ்டை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. சன் தொலைக்காட்சி, சன் நெக்ஸ்ட் என சேட்டிலைட், டிஜிட்டல் நிறுவனங்கள் அவர்களிடமே இருப்பதால் வெளியே யாருக்கும் அவை கிடைக்கப் போவதில்லை. விஜய்யின் 66 வது படத்தை வம்சி பைடிபள்ளி இயக்க, தில் ராஜு தயாரிக்கிறார். தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் படத்தை எடுக்க உள்ளனர்.

இந்தப் படத்தின் அனைத்து மொழிகளுக்குமான திரையரங்கு, சேட்டிலைட், டிஜிட்டல் உரிமைகளை வாங்க ஸீ நெட்வொர்க் பேச்சுவார்த்தையை ஆரம்பித்திருக்கிறது. ஷங்கர் ராம் சரணை வைத்து இயக்கிவரும் படத்தின் திரையரங்கு, சேட்டிலைட், டிஜிட்டல் உரிமைகளையும் இந்நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இப்போது இன்னும் தொடங்கப்படாத விஜய் படத்துக்கும் விலை பேசி வருகிறார்கள்.

Also read... காதல் உண்டு... கல்யாணம் இல்லை - ரகுல் ப்ரீத் சிங்

நாம் விசாரித்ததில் 90 சதவீத பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது. இன்னும் சில தினங்களில் ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என்கிறார்கள்.

ஒருபக்கம் சின்ன பட்ஜெட் படங்களை வாங்க ஆளில்லை. இன்னொரு பக்கம் படம் தொடங்கும் முன்பே வாங்க அலைகிறார்கள். இந்திய சினிமாவில் நடிகர்களின் மாஸே அனைத்தையும் தீர்மானிக்கிறது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Vijay

அடுத்த செய்தி