ஹரி இயக்கத்தில், அருண் குமார் நடித்துவரும் யானை படத்தின் டிஜிட்டல், சேட்டிலைட் உரிமைகளை பிரபல நிறுவனம் வாங்கியுள்ளது.
முன்னணி நடிகர்களின் படங்கள் அறிவிக்கப்படும் போதே அதன் டிஜிட்டல், சேட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமைகள் வாங்கப்படுகின்றன. இந்த உரிமைகளின் வழியாகவே 100 கோடிகளுக்கு மேல் வசூலிக்கின்ற படங்கள் இருக்கின்றன. நட்சத்திரங்களின் ஸ்டார் வேல்யூவுக்கு ஏற்றபடி இந்த வசூல் மாறுபடும்.
ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்திருக்கும் யானை படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிவடைந்துவிட்டது. அருண் விஜய் தனது காட்சிகளுக்கான டப்பிங்கை பேசினார். இந்நிலையில் படத்தின் டிஜிட்டல் மற்றும், சேட்டிலைட் உசூமையை ஸீ நெட்வொர்க் வாங்கியுள்ளது. திரையரங்கு வெளியீட்டுக்குப் பிந்தைய ஓடிடி உசூமையையும் ஸீ வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. அருண் விஜய்யின் படமொன்று முடியும் முன்பே விற்கப்பட்டிருப்பது முக்கியமானது.
யானையில் ப்ரியா பவானி சங்கர் நாயகியாக நடித்துள்ளார். ராதிகா சரத்குமார், சமுத்திரகனி, யோகி பாபு உள்ளிட்டவர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தூத்துக்குடி ராமேஸ்வரம் கடற்கரையோர கிராமங்களில் முக்கிய காட்சிகளை படமாக்கியுள்ளனர். ஜீ.வி.பிரகாஷ் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
ஹரி தனது வழக்கமான ஆக்ஷன் அதிரடிகளுடன் யானையை எடுத்துள்ளார். தமிழில் படம் வெளியாகும் அதேநாள் தெலுங்கிலும் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். 2022 பிப்ரவரியில் யானை அனேகமாக திரைக்கு வரலாம்.
Published by:Tamilmalar Natarajan
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.