Maanaadu: சிம்புவின் ‘மாநாடு’ பாடல் குறித்த அப்டேட்டை வெளியிட்ட யுவன்!

யுவன் ஷங்கர் ராஜா

அரசியலை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படத்தின் போஸ்டர்கள், மோஷன் போஸ்டர் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

  • Share this:
    ’மாநாடு’ படத்தின் முக்கிய அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.

    சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘மாநாடு’. இந்தப் படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இதில் சிம்பு அப்துல் காலிக் என்ற முஸ்லிம் இளைஞனாக நடிக்கிறார். யுவன்சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அரசியலை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படத்தின் போஸ்டர்கள், மோஷன் போஸ்டர் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் படத்தின் பாடல்கள் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் எதிர்ப்பார்ப்பு தற்போது பூர்த்தியாகியிருக்கிறது.

    அதாவது மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெகு விரைவில் வெளியாகும் என இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதனால் சிம்பு ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். முன்னதாக மாநாடு படத்தின் பாடல், ரம்ஜான் தினத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த சமயத்தில் வெங்கட் பிரபுவின் தாயார் மரணமடைந்ததால், பாடல் வெளியீடு தள்ளிப் போனது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: