Home /News /entertainment /

உங்களுக்கு பழைய யுவன்தானே வேண்டும்! இயக்குனரை கலாய்த்த யுவன் சங்கர் ராஜா

உங்களுக்கு பழைய யுவன்தானே வேண்டும்! இயக்குனரை கலாய்த்த யுவன் சங்கர் ராஜா

யுவன் - இயக்குனர் பிரதீப்

யுவன் - இயக்குனர் பிரதீப்

லவ் டுடே படத்திலிருந்து முதல் பாடல் நாளை மறுதினம் வெளியாக உள்ளது. இதனையொட்டி படக்குழுவினர் புரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்கள்.

    எனக்கு பழைய யுவன் வேண்டும் என்று, பாடல் கம்போசிங்கின்போது கேட்ட இயக்குனரை, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா கிண்டல் செய்யும் வீடியோ ஒன்று ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்டு வருகிறது.

    ஜெயம் ரவி நடித்த கோமாளி திரைப்படத்தின் மூலம், அதன் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் திரைத்துறையினர் மற்றும் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார். இவர் அடுத்ததாக லவ் டுடே என்ற படத்தை இயக்கி நடிக்க உள்ளார்.

    இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் மூலமாக நடிகராக பிரதீப் ரங்கநாதன் அறிமுகமாகிறார்.

    மனைவி கிருத்திகாவின் ‘பேப்பர் ராக்கெட்’ ரிலீஸ் .. உதயநிதியின் அடடே பதிவு!

    அவருக்கு ஜோடியாக நடிகை இவானா நடிக்கிறார். சத்யராஜ் மற்றும் ராதிகா முக்கிய கதாபாத்திரங்களில் இடம் பெறுகிறார்கள். லவ் டுடே படத்திலிருந்து முதல் பாடல் நாளை மறுதினம் வெளியாக உள்ளது.

    இதனையொட்டி படக்குழுவினர் புரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்கள். இதில் யுவன் சங்கர் ராஜா மற்றும் பிரதீப் ரங்கநாதன் ஆகியோர் பாடல் கம்போசிங்கிற்காக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது, ‘எனக்கு பழைய யுவன் வேணும் சார்’ என்று மிகுந்த ஆர்வத்துடன் எமோஷனலாக பிரதீப் கேட்கிறார்.

    ரசிகர்களை நம்பி களத்தில் குதித்த பிக் பாஸ் அக்‌ஷரா!

    இதனை உள்வாங்கிக் கொண்ட யுவன் சற்று நேரம் நிதானமாக யோசித்து விட்டு, பழைய டிரங்க் பெட்டி ஒன்றை திறக்கிறார். இதனால் ரசிகர்கள் ஆர்வம் அதிகரித்த நிலையில், அதிலிருந்து தனது இளம் வயது போட்டோவை எடுத்து கொடுத்து இதுதான் பழைய யுவன்சங்கர்ராஜா என்று அவர் கூற பிரதீப்பிற்கு அதிர்ச்சி ஏற்படுகிறது. இதன்பின்னர் பாடல் கம்போசிங்கை இருவரும் தொடர்கின்றனர்.



    சுவாரசியமான இந்த வீடியோவை யுவன்ஷங்கர் ராஜா ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர். தற்போது 8 க்கும் அதிகமான படங்களுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இவரது இசையில் உருவான கார்த்தியின் விருமன் மற்றும் விஷாலின் லத்தி ஆகிய படங்கள் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாக உள்ளது
    Published by:Musthak
    First published:

    Tags: Yuvan Shankar raja

    அடுத்த செய்தி