Home /News /entertainment /

சுந்தர் சி படத்தில் நடிக்கும் யுவன் சங்கர் ராஜா?

சுந்தர் சி படத்தில் நடிக்கும் யுவன் சங்கர் ராஜா?

சுந்தர் சி படம்

சுந்தர் சி படம்

படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். அத்துடன் சிறிய வேடம் ஒன்றிலும் யுவன் சங்கர் ராஜா நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

சுந்தர் சி இயக்கி வரும் புதிய படத்தில் யுவன் சங்கர் ராஜா கவுரவ வேடத்தில் நடித்திருப்பதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு பக்கம் நடிப்பு, இன்னொரு பக்கம் இயக்கம் என்று பிஸியாக இருக்கிறார் சுந்தர் சி. கலகலப்பு, கலகலப்பு 2, அரண்மனை சீரிஸ்களுக்குப் பிறகு அந்தப் படங்களைப் போல் ஒன்றுக்கு மேற்பட்ட நாயகர்களை வைத்து சுந்தர் சி. ஒரு படத்தை எடுத்து வருகிறார். இதற்கு முதலியார் மகன்கள் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை.

வேறுபாடுகள் காரணமாக தனுஷ் படத்திலிருந்து விலகுகிறேன் - பாடலாசிரியர் விவேக்

இந்தப் படத்தில்  ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா, அம்ரிதா, ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் நடிக்கிறார்கள். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். அத்துடன் சிறிய வேடம் ஒன்றிலும் யுவன் சங்கர் ராஜா நடித்திருப்பதாக கூறப்படுகிறது. படப்பிடிப்புத்தளத்தில் அவர் மற்ற நடிகர்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளனர். இதனால் இந்த செய்தி உண்மையாக இருக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

வலிமை படத்துக்காக ரத்த காயங்களுடன் அஜித் - வைரலாகும் படங்கள்!

இந்தப் படத்தை குஷ்புவின் அவ்னி சினி மேக்ஸ் தயாரித்துள்ளது. சுந்தர் சி. தனது வழக்கமான ரொமான்டிக் காமெடி திரைப்படமாக இதனை எடுத்து வருகிறார். விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை முடித்து கோடை விடுமுறையில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Sundar.C, Yuvan Shankar raja

அடுத்த செய்தி