Home /News /entertainment /

உங்கள் அன்புக்கு முன் விருதுகள் பெரிய விஷயமல்ல - யுவன் ஷங்கர் ராஜா!

உங்கள் அன்புக்கு முன் விருதுகள் பெரிய விஷயமல்ல - யுவன் ஷங்கர் ராஜா!

யுவன் ஷங்கர் ராஜா

யுவன் ஷங்கர் ராஜா

உங்களின் 'பிஜிஎம் கிங்' 'லிட்டில் மேஸ்ட்ரோ' உள்ளிட்ட பட்டங்கள் தான் இதுவரை நான் அடைந்திருக்கும் உயரத்திற்கு காரணமாக அமைந்தது.

    தான் சினிமாவுக்கு வந்து 25 ஆண்டுகள் ஆனதையொட்டி, ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.

    1997-ம் ஆண்டு அரவிந்தன் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் யுவன். தமிழின் மூத்த இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் மகனாக இருந்தபோதிலும் தனக்கென ஓரிடத்தைப் பிடித்தார். இன்றைய இளைஞர்கள் பலருக்கும் ஃபேவரிட் இசையமைப்பாளராக வலம் வருகிறார் யுவன். இந்நிலையில் தான் திரைத்துறைக்கு வந்து 25 ஆண்டுகள் ஆனதையொட்டி, ரசிகர்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில், “எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே. என் அன்பையும், நன்றியையும் எனது ரசிகர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் இல்லாமல் என்னால் இந்த 25 வருடத்தை கடந்திருக்க முடியாது.

    என் ஆழ்மனதிலிருந்து உங்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இத்தனை ஆண்டுகளாக என் மீது நம்பிக்கை வைத்து என்னுடன் பணியாற்றிய இயக்குநர்கள், தயாரிப்பாளர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றியை கூறிக்கொள்கிறேன். நீங்கள் இல்லாவிட்டால், இசையின் மீதான என் காதலை வெளிப்படுத்தியிருக்க முடியாது.

    மனைவியுடன் விபத்தில் சிக்கிய சன் டிவி வானத்தைப் போல சீரியல் பிரபலம்

    16 வயது சிறுவனாக அரவிந்தன் படத்துக்கு இசையமைக்கத் தொடங்கி, இன்று வலிமை வரை வந்திருக்கிறேன். நான் இசையமைத்த பல புதிய படங்கள் வரும் காலங்களில் வெளியாக உள்ளன. இதுவரையான என் இசைப்பயணம் மகிழ்ச்சியாகவும், மேஜிக்காகவும் இருக்கிறது. என் தந்தைக்கு இந்தநேரத்தில் நன்றி கூறிக்கொள்கிறேன். உங்கள் அன்புக்கும், ஆதரவுக்கும் தகுதியான இசையை அமைப்பது மட்டுமே எனது குறிக்கோள். ஊடக நண்பர்களுக்கு எனது நன்றிகள்.

    Baakiyalakshmi: பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகிய செழியன்?



    உங்களின் 'பிஜிஎம் கிங்' 'லிட்டில் மேஸ்ட்ரோ' உள்ளிட்ட பட்டங்கள் தான் இதுவரை நான் அடைந்திருக்கும் உயரத்திற்கு காரணமாக அமைந்தது. என் ரசிகர்களின் அன்புக்கு முன்னதாக விருதுகள் எனக்கு பெரிய விஷயமே அல்ல. ரசிர்களின் அன்புதான் என்னை முன்னோக்கி ஓட வைக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Tamil Cinema, Yuvan Shankar raja

    அடுத்த செய்தி